மனைவி, குழந்தைகளின் உயிரை பறித்தபோதும் அஞ்சாத அல் ஜசீரா பத்திரிகையாளர்.. கௌரவிக்கும் கேரளா!
திருவனந்தபுரம்: தன்னுடைய மனைவி, குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து செய்திகளாக சேகரித்து மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வந்த வைல் அல் தஹ்துத் எனும் பத்திரிகையாளருக்கு, சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை கேரளா அறிவித்திருக்கிறது.
போர்கள் என்பது இந்த மண்ணில் கூடவே கூடாது என்பதுதான் நம் அனைவரின் நிலைப்பாடும். ஆனால் தவிர்க்க முடியாமல் அது இன்னமும் மனித சமூகத்தை பின்தொடர்ந்துதான் வந்துகொண்டிருக்கிறது. இப்படியாக நீண்ட காலமாக நடைபெற்று வரும் போர்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் முக்கியமானது. இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடமிருந்து தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி பாலஸ்தீனம் வந்தனர். அவர்களை பாலஸ்தீன மக்கள் அன்போடு வரவேற்றனர்.

ஆனால் பிரிட்டனும், அமெரிக்காவும் யூதர்களை பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்குவதாக வாக்களித்தனர். இப்படி உருவானதுதான் இஸ்ரேல். வாழ நிலம் கொடுத்த நாட்டையே இரண்டு துண்டாக உடைத்து அதில் இஸ்ரேலை யூதர்கள் உருவாக்கினார்கள். நாளடைவில் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைய தொடங்கியது. இதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாக தொடங்கின.
பாலஸ்தீன விடுதலைக்கு இந்த அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுக்க, இவர்களை அடக்குகிறோம் என இஸ்ரேல் போரில் குதித்தது. இதன் விளைவாக அவ்வப்போது பாலஸ்தீனம் மீது குண்டுகள் பாய்ந்தன. எங்கு பார்த்தாலும் அழுகை குரலும், வெடி குண்டுகளால் சிதறுண்ட உடல்களும் பாலஸ்தீனத்தில் மிகவும் இயல்பானதாக மாறியது. இதையெல்லாம் பார்த்த உலக நாடுகள் பஞ்சாயத்து பேசி, இஸ்ரேலுக்கு கடிவாளமிட்டது.
ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதியன்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் முதன் முறையாக இஸ்ரேல் மீது, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் ராக்கெட்களை வீசி தாக்குதலை தொடங்கி வைத்தது. இதற்கு எதிராக இஸ்ரேல் மிகப்பெரிய பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது. கடந்த 150 நாட்களாக நடைபெற்று வரும் இந்த பதில் தாக்குதலில் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியெனில் நாளொன்றுக்கு சராசரியாக 180 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இந்த போர் தொடர்பாக செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வந்தவர்தான் அல் ஜசீரா சேனலின் காஸா பீரோ தலைவர் 'வைல் அல் தஹ்துத்' எனும் பத்திரிகையாளர். இஸ்ரேல் போரில் பொதுமக்கள் மட்டுமல்லாது 100க்கும் அதிகமான பத்திரிகையாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் வைல் அல் தஹ்துத்-தின் மனைவி, இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த ஏவுகணை தாக்குதலில், இவருடன் பணியாற்றிய கேமரா மேன், சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். உடனே அவரிடமிருந்து கீழே விழுந்த கேமராவை எடுத்து, அந்த சம்பவத்தை உலகுக்கு தெரியப்படுத்தினார் வைல் அல் தஹ்துத்.
தற்போது வைல் அல் தஹ்துத், கத்தாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும், அவர் மீண்டும் பத்திரிகையாளர் பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது தியாகத்தை போற்றும் விதமாக கேரள மீடியா அகாடமியால் இந்த ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் ( Media person of the year ) விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்குகிறார். விருது, பதக்கத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.
-
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
ஹார்முஸுக்கு பிறகு ஒரே நம்பிக்கை "யான்பு".. அதையும் விடாமல் தாக்கும் ஈரான்! கொந்தளிக்கும் சவுதி -
ஈரான் உளவு துறை மாஸ்டர் மைண்ட் காலி.. முதுகை உடைத்த இஸ்ரேல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு -
டீ போட்டு தராத மருமகளை போட்டுத்தள்ளிய மாமியார்.. அதுவும் எப்படி தெரியுமா.. ஆடிப்போன கேரளா -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications