மிதிபட்டு இறந்த 4 கேரள மாணவர்கள்.. கொச்சி பல்கலைக்கழகத்தில் துயரம்! விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்
திருவனந்தபுரம்: கொச்சின் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து உயர்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி பல்கலைக்கழகத்தில் CUSAT எனப்படும் இசைத் தொழில்நுட்ப திருவிழா நேற்று நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்பிக்க கேரள மாநில உயர்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். தொழில்நுட்ப திருவிழாக்களையும் பல்கலைக்கழக போட்டிகளையும் நடத்த பல்கலைக்கழகம் பயன்படுத்தும் வழக்கமான நடைமுறை இது. ஆனால், இதுபோன்ற ஒரு சோகமான சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.
எனவே இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறித்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்க முயற்சிப்போம். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளேன், அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்த பிறகு விவரங்களைத் தெரிவிப்போம்." என்றார்.
இதுகுறித்து, கேரள சட்ட அமைச்சர் பி ராஜீவ் தெரிவிக்கையில், "இது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம். கேரளாவை சேர்ந்த மூன்று மாணவர்கள் உள்ளிட்ட 4 பேரை இழந்துள்ளோம். இதுபோன்ற சம்பவம் கேரளாவில் முதல் முறையாக நடக்கிறது. இது எதிர்பாராத ஒரு விஷயம். வார்டில் உள்ள அனைத்து நோயாளிகளையும் நாங்கள் சென்று பார்த்தோம். இரண்டு நோயாளிகள் ஐசியுவில் உள்ளனர். மற்றொரு மருத்துவமனை ஐசியுவில் இரண்டு மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடிந்த உதவிகள் அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்.
இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. காவல்துறை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. சுகாதார அமைச்சர் நேரடியாக இறங்கி உள்ளார். மருத்துவக் கல்லூரிகள் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளிலும் அனைத்து சிகிச்சை வசதிகளையும் அவர் ஒருங்கிணைத்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். அதே நேரத்தில் பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒரு முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது. அந்த விசாரணை அடிப்படையில் ஒரு முடிவுக்கு வரலாம்." என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications