கேரள மான்சூன் பம்பர் லாட்டரி ரூ 10 கோடி.. வெளிமாநில தொழிலாளிக்கு அடித்த யோகம்? கடை உரிமையாளர் சொன்னதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசுத் தொகை கொண்ட லாட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.10 கோடி கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் அருகே கிராமத்தில் விற்கப்பட்ட கடையில் தான் அடித்துள்ளது. அந்த கடைக்காரர் கூறுகையில், முதல் பரிசு யாருக்கு விழுந்துள்ளது என்று நியாபகம் இல்லை. வெளி மாநில தொழிலாளர்களில் யாருக்கோ விழுந்தது போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

கேரளாவில் நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. முதல் பரிசாக ரூ. 10 கோடி MC 678572 எண்ணிற்கு அடித்தது. இந்த டிக்கெட் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் பகுதியில் விற்பனை செய்யப்பட்டது ஆகும்.

kerala-monsoon-bumper-lottery-rs-10-crore-first-prize-winner-likely-a-guest-worker

வெளி மாநில தொழிலாளியா?

பையனூரின் தலிபிரம்பா அருகே உள்ள குருமாதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட போகுண்ட் என்ற கிராமத்தில் உள்ள ஒரு கடையில் இந்த டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது. ஏகேஜி லாட்டரி ஸ்டால் என்ற கடையில் டிக்கெட் விற்பனையானது தெரிய வந்துள்ள சூழலில் தற்போது வரை அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவ்வில்லை. வழக்கமாக டிக்கெட் பரிசுத்தொகை விழுந்த சில மணி நேரங்களில் அதிர்ஷ்டசாலி தெரிந்து விடும்.

வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விழுந்தால் ஓரிரு நாட்கள் கழித்தே அதிர்ஷ்டசாலி யார்? என்று தெரிய வரும். இதனால் தற்போது வரை டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவராததால், ஒரு வேளை வெளி மாநில தொழிலாளர்கள் யாராவது டிக்கெட்டை வாங்கி சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.

சந்தேகத்துடன் கூறிய கடை உரிமையாளர்

டிக்கெட் விற்பனை செய்த கடையின் உரிமையாளர் கங்காதரன் இதுபற்றி கூறுகையில், "வின்னிங் நம்பர் உள்ள டிக்கெட்டை வாங்கி சென்ற நபர் யார் என்ற நியாபகம் தனக்கு இல்லை. வெளி மாநில தொழிலாளராக இருக்கலாம் என நினைக்கிறேன்' என சந்தேகத்துடன் கூறியுள்ளார். இதனால் டிக்கெட் வாங்கிய லாட்டரி பிரியர்கள் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கையில் எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?

ரூ. 10 கோடி பரிசு என்றாலும் வரி பிடித்தம், கமிஷன் தொகை போக வெற்றியாளருக்கு ரூ 5.16 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. கேரள மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட மொத்தம் 34 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் 33.48 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்த லாட்டரி விற்பனை மூலம் கேரள அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.

பையனூர லாட்டரி அலுவலகத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளுக்க்கு சமீப காலமாக அதிக அளவில் பரிசு அடிப்பதாக கேரள சேட்டன்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சம்மர் பம்பர் டிக்கெட்டிற்கான குலுக்கலில் முதல் பரிசு பையனூர் சப் ஆபிசில் இருந்து விநியோகம் செய்யப்பட்ட டிக்கெட்டிற்கே கிடைத்தது.

பையனூர் மாவட்டத்திலேயே விழும் பரிசுகள்

அதேபோல பல பம்பர் டிக்கெட்டுகளில் இரண்டாவது பரிசும் பையனூர் வட்டாரத்தில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டிற்கே கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மூன்று வாரத்தில் முதல் பரிசு அனைத்தும் பையனூர் வட்டாரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கே அடித்தது. இதனால், இப்பகுதியில் டிக்கெட் விற்பனை அனல் பறக்க நடக்கிறதாம். கேரள மான்சூன் பம்பர் லாட்டரியில் இரண்டாவது பரிசு ரூ.10 லட்சம் ஐந்து அதிர்ஷ்ட எண்களுக்கு அடித்துள்ளது.

MA 719846, MB 682584, MC 302229, MD 273405, ME 372685 என்ற எண்ணிற்கு அடித்துள்ளது. கேரள லாட்டரிகளை பொறுத்தவரை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் விற்பனை செய்வது சட்ட விரோத செயல் ஆகும். இதனால் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றால் பரிசுத்தொகையை வழங்க கேரள அரசுக்கு உரிமை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+