வேற்று மத காதலன்! 9ம் வகுப்பு மகளுக்கு.. பூச்சி மருந்து ஊற்றி.. கொலை செய்த அப்பா.. கேரளாவில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரளாவில் 43 வயதான என்ஜினியர் ஒருவர் தனது மகளையே கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையை விட.. கொலை செய்யப்பட்ட விதம்.. கொலைக்கான காரணங்கள் இன்னும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கேரளா மாநில ஆலுவாவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் அபீஸ் முஹம்மது. தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் பொறியாளராக இருக்கிறார். ஆலுவா அருகே இருக்கும் கருமாலூர் என்ற பகுதியில் இவர்கள் வீடு உள்ளது.

இவரின் மகள் 9ம் வகுப்பு படித்து வந்தார் . அதே பள்ளியில் படிக்கும் வேறு மாணவர் ஒருவருடன் அந்த மாணவி காதலில் இருந்துள்ளார் . 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபம்: முதலில் அந்த மாணவி, 12ம் வகுப்பு மாணவருடன் பள்ளியில் காதலில் இருந்துள்ளார். அதன்பின் இவர்கள் அடிக்கடி வெளியே சந்திக்க தொடங்கி உள்ளனர். மேலும் அப்பாவின் போன் மூலமும் அடிக்கடி இவர்கள் பேசி உள்ளனர். காதல் மெசேஜ்கள் பலவற்றை இவர்கள் செய்துள்ளனர்.
இதை கேள்விப்பட்டு.. அந்த மாணவியின் அப்பா அபீஸ் முஹம்மது தனது மகளை மிக மோசமாக தாக்கி உள்ளார். ரூமில் வைத்து மோசமாக தாக்கி உள்ளார். அவரின் உடல் முழுக்க பல இடங்களில் கடுமையாக காயம் ஏற்பட்டு உள்ளது. ரூமில் வைத்து மிக மோசமாக உடல் முழுக்க காயம் ஏற்படும் வகையில் தாக்கி உள்ளார்.
அதேபோல் அவரின் உடலுக்குள் சூடு போட்டுள்ளார். அதோடு நிற்காமல் அந்த மாணவரையும் மிரட்டி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அந்த மாணவி .. தொடர்ந்து அந்த மாணவரிடம் பேசி உள்ளார். வேறு ஒரு திருட்டு போனை அந்த மாணவரிடம் வாங்கி உள்ளார். அந்த மாணவரிடம் இருந்து போனை வாங்கி இவர் அடிக்கடி இரவில் மெசேஜ் செய்துள்ளார்.
அப்பாவிற்கு தெரியாமல் தொடர்ந்து மெசேஜ் செய்து வந்துள்ளார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அபீஸ் முஹம்மது அந்த மாணவியை போட்டு தாக்கி உள்ளனர். உடல் முழுக்க கடுமையான காயத்தை ஏற்படுத்தி உள்ளது.
காயம்: இதில் உடல் முழுக்க காயத்தோடு அந்த சிறுமி போராடி உள்ளார். அதோடு நிற்காமல் சிறுமியிடம்.. நீ விஷத்தை குடித்து செத்து விடு.. இல்லை நான் கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதை சிறுமி தற்கொலை செய்துகொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த அபீஸ் முஹம்மது அவரின் வாயில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.
பூச்சி மருந்தை கலந்து அந்த சிறுமியின் வாயிலேயே கொடுத்துள்ளார். இதில் உடல் முழுக்க அந்த சிறுமியை கடுமையாக எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு உள்ளார். சிறுமி கத்தியதை கேட்டு வீட்டிற்கு வந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்து சோதனை செய்ததில் உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணை; இதையடுத்து நடந்த விசாரணையில் அபீஸ் முஹம்மது தனது மகளுக்கு விஷம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் உடல் உறுப்புகள் எல்லாம் சேதம் அடைந்தது.. உறுப்புகள் செயல் இழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக போராடி வந்த அந்த சிறுமி நேற்று இரவு பலியானார். இதையடுத்து அபீஸ் முஹம்மது போலீசாரால் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். அவரிடம் கொலை தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications