14 வருட பிளான்.. கொலையாளி ஒருவர் அல்ல.. 2 பேர்.. கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் திருப்பம்!
கேரளாவில் ஒரே குடும்பத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே குடும்பத்தில் 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கொலையை செய்தது ஒருவர் அல்ல இருவர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜூலி தாமஸ். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை 14 வருடமாக கொலை செய்துள்ளார்.
மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொடுத்து இவர் உறவினர்களை கொன்றுள்ளார். சொத்துக்கு ஆசைப்பட்டு இந்த கொலை நடந்துள்ளது . கேரளாவில் இந்த மட்டன் சூப் மர்டர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

என்ன திருமணம்
ஜூலி 16 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராய் தாமஸ் பல கோடி சொத்துக்களை கொண்டவர். அதை அபகரிக்க ஆசைப்பட்டு இந்த கொலைகளை செய்துள்ளார். ஜூலி தாமஸ் தனது மாமியார் அன்னம்மாவிற்கு 2002ல் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

எத்தனை கொலை
அதற்கு அடுத்து 2008ம் ஆண்டு தனது மாமனார் டாம் தாமஸை அதேபோல் கொன்றுள்ளார். 2011ம் ஆண்டு இதேபோல் தனது கணவர் ராய் தாமஸையும் கொன்றுள்ளார். மேலும் மாமியார் அன்னம்மாவின் சகோதரர் மேத்யூவை 2014ம் ஆண்டு கொலை செய்துள்ளார். பின் ஜூலி தாமஸ் தனது காதலர் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது குழந்தைகளை இதேபோல் 2016ல் சயனைடு சூப் கொடுத்து கொன்றுள்ளார்.

கண்டுபிடித்தனர்
இதையடுத்து 2017ல் ஜூலி தாமஸ் மற்றும் அவரின் காதலர் சாஜு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த மரணத்தில் சந்தேகம் அடைந்த ஜூலியின் முன்னாள் கணவர் ராய் தாமஸின் தம்பி போலீசில் புகார் அளித்தார். இதனால் போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். இந்த விசாரணையின் போது ஜூலி தாமஸ், சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்று 6 பேரையும் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

உறுதியானது
இதன்பின் நடந்த பிரேத பரிசோதனையில் எல்லோரும் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. முதலில் இந்த கொலையில் ஜூலியின் காதலன் சாஜிக்கு தொடர்பு இல்லை என்று கூறப்பட்டது. அதாவது சாஜியை மணக்க வேண்டும் என்று ஜூலிதான் இப்படி கொலைகளை செய்தார்.

ஆனால் இல்லை
சாஜியின் மனைவி மற்றும் குழந்தைகளையும் ஜூலி மட்டும்தான் கொலை செய்தார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் தொடர் போலீஸ் விசாரணையின் மூலம் சாஜிக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. அவரும் இந்த கொலையை செய்துள்ளார்.

என்ன திட்டம்
தன்னுடைய மனைவியை கொலை செய்ய அவரே திட்டம் போட்டு கொடுத்து இருக்கிறார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த கொலையில் இரண்டு பேர் தற்போது முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் ஜூலி தன்னுடைய பள்ளி, கல்லூரி விவரங்களையும் மறைத்துள்ளார்.

எல்லாம் பொய்
இவர் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் வேலை பார்த்ததாக கூறியது பொய். அதேபோல் இவர் பி டெக் படித்ததாக கூறியதும் பொய். இன்னும் அவர் நிறைய மோசடி அல்லது கொலைகளை செய்து இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் .












Click it and Unblock the Notifications