பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க இப்படியா? பிரதமர் மோடிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்!சிக்கிய சேவியர்
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை கேரளா செல்ல உள்ளார். இந்நிலையில் தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போல் பிரதமர் மோடியை கொல்வதாக மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்து பெரும் அதிர்ச்சியது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் மிரட்டல் விடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் தான் மிரட்டலுக்கான காரணமாக அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை கேரளா செல்கிறார். நாளையும், நாளை மறுநாளும் பிரதமர் மோடி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி முறையாக நடக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் சென்றது. அந்த கடிதம் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதில் கேரளா ரும் பிரதமர் நரேந்திர மோடி ராஜீவ் காந்தியை போன்ற நிலையை சந்திப்பார் எனக்கூறி மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த சுரேந்திரன் உடனடியாக கடிதத்தை போலீசிடம் வழங்கி புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வந்தனர். கொச்சியை சேர்ந்த என்கே ஜானி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தான் மிரட்டல் விடுக்கவில்லை எனவும், தன்மீதான காழ்ப்புணர்ச்சியில் மற்வறர்கள் அவரது பெயரில் மிரட்டல் விடுத்து இருக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் சில பெயர்களை அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து என்கே ஜானியை போலீசார் விட்டுவிட்டு அவர் கூறிய நபர்களை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு மனித வெடிகுண்டு மூலம் மிரட்டல் விடுத்ததாக கொச்சியை சேர்ந்த சேவியர் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனை கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி சேதுராமன் கூறுகையில், ‛‛பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளோம். அவரது பெயர் சேவியர். இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மிரட்டல் கடிதத்தின் பின்னணி என்பது இருநபர்களுக்கு இடையேயான தனிப்பட்ட பிரச்சனை தான் காரணமாக உள்ளது. அதாவது பக்கத்துக்கு வீட்டுக்காரரை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு எதிராக மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் தடயவியல் துறையின் உதவியுடன் அந்த நபரை கைது செய்துள்ளோம்'' என்றார்.
அதாவது கைது செய்யப்பட்ட சேவியருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தான் பக்கத்து வீட்டுக்காரரை சிக்கவைக்கும் நோக்கத்தில் அவரது முகவரியில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பது தெரியவந்தது. கைதான சேவியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பற்றிய அனைத்து விபரங்களையும் போலீசார் கேட்டறிந்து வருகின்றனர்.
இதற்கிடையே நாளை பிரதமர் நரேந்திர மோடி கேரளா செல்ல உள்ளதால் அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் கூறுகையில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,060 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியில் 15 ஆயிரம் பேரும், யுவம் -23 நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications