Pooja Bumper Lottery: கேரள பூஜா பம்பர் லாட்டரி.. ரூ.12 கோடி பரிசு அடித்த லக்கி நம்பர் இதுதான்.. அதிர்ஷ்டசாலி யார்?
திருவனந்தபுரம்: கேரளா லாட்டரி (Kerala Pooja Bumper Lottery) பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த, பூஜா பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் நடந்து முடிந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் இந்த லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி JD 545542 என்ற எண்ணுக்கு தான் அடித்துள்ளது.
பூஜா பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடியும் இரண்டாவது பரிசாக 5 டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.1 கோடியும் அளிக்கப்படுகிறது. லாட்டரியில் பரிசு அடித்துள்ள அதிர்ஷ்டசாலிகள் யார் யார்? என்பதை கேரள சேட்டன்கள் ஆர்வத்துடன் தேடி வருகிறார்கள்.
கேரளாவில் கடந்த இரு மாதங்களாக பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. மொத்தம் 5 சீரியஸ்களில் விற்பனை செய்யப்பட்ட இந்த லாட்டரிகளுக்கான முதல் பரிசு ரூ.12 கோடியாகும். இரண்டாவது பரிசாக ரூ. 1 கோடி 5 டிக்கெட்டுகளுக்கு கிடைக்கும். மூன்றாவது பரிசாக ரூ.50 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

பூஜா பம்பர் லாட்டரி வின்னர்
4-வது பரிசாக ரூ.5 லட்சமும், ஐந்தாவது பரிசாக ரூ.2 லட்சமும், 6 வது பரிசாக ரூ.5,000-மும் 7-வது பரிசாக ரூ.2,000 மும் வழங்கப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக விற்பனை நடைபெற்று வந்த இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணியம் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் குலுக்கல் நடந்தது.
இதில் முதல் பரிசாக ரூ.12 கோடியானது JD 545542 என்ற எண்ணுக்கு தான் விழுந்துள்ளது. ரூ.12 கோடியை வென்றவர் யார் என்பதை கேரள சேட்டன்கள் ஆர்வத்தோடு தேடி வருகிறார்கள். ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் அளிக்கப்படும். கேரள லாட்டரியில் பரிசு அடித்தவர்கள் வின்னிங் நம்பர்களை www.keralalotteries.com என்ற கேரள லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.
வெளி மாநிலத்தவருக்கு பரிசு அடித்தால்
வெற்றி பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் டிக்கெட்டை லாட்டரி அலுவலகத்தில் கொடுத்து பரிசை பெற்றுக்கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கு 30 சதவீத வரி மற்றும் ஏஜெண்ட் கமிஷன் ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டு ஏனைய தொகை பரிசுஅடித்தவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். கேரள லாட்டரிகளை தமிழ்நாடு, கர்நாடகா போன்ற லாட்டரிகளுக்கு தடை செய்யப்பட்ட மாநிலங்களில் விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.
கள்ளச்சந்தையில் விற்பனை செய்த லாட்டரிகளுக்கு பரிசுத்தொகையும் கிடைக்காது. வெளி மாநிலத்தவர்களுக்கு பரிசு அடித்தால், அவர்கள் கேரளாவில் டிக்கெட் வாங்கியதை உறுதி செய்ய வேண்டியிருக்கும் என்று கேரள லாட்டரி வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஓணம் பம்பர் வின்னர் யார்?
கேரள ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த மாத துவக்கத்தில் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக TH 577825 என்ற எண்ணிற்கு பரிசுத்தொகை அடித்தது. இந்த டிக்கெட்டிற்கு ரூ.25 கோடி முதல் பரிசை ஆலப்புழாவை சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் வென்று ஒரே நாள் இரவில் பல கோடிகளுக்கு அதிபதியானார். முதல் முறையாக பம்பர் லாட்டரி டிக்கெட் வாங்கிய சரத் நாயர், பரிசு அடித்த போதிலும் தொடர்ந்து பெயிண்ட் கடையில் வேலை பார்க்க இருப்பதாக கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications