கேரள மக்களிடம் எடுபடாத தங்கக்கடத்தல் குற்றச்சாட்டு... வெற்றிமுகத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணி..!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு மீது சபரிமலை விவகாரம் தொடங்கி தங்கக்கடத்தல் வரை எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களை முன்வைத்தும் அது மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
கேரளாவில் மொத்தம் உள்ள 941 கிராம பஞ்சாயத்துக்களில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மக்கள் செல்வாக்கை தக்கவைத்துள்ளார் பினராயி விஜயன்.
Recommended Video

இது இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ள கேரள சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யு.டி.எஃப். கூட்டணி
கேரளாவை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளடங்கிய இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும் - காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளடங்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் போட்டி. இந்தப் போட்டியில் யு.டி.எஃப்.கூட்டணியைக் காட்டிலும் எல்.டி.எஃப். கூட்டணி அதிக முறை கேரளாவில் வெற்றி பெற்றிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்
இந்நிலையில் இப்போது நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. சபரிமலை விவகாரம் தொடங்கி தங்கக்கடத்தல் வழக்கு வரை பினராயி அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இருப்பினும் அந்த குற்றச்சாட்டுகள் எதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை இன்று வெளியாகியுள்ள கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

கிளை வாரியாக
இடதுசாரி ஜனநாயக முன்னணியின் இந்த வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுவது அடிமட்டம் வரை அந்தக் கூட்டணிக்கு உள்ள கட்டமைப்பும் மக்கள் அணுகுமுறையும் தான். அதற்கு உதாரணமாக கூறவேண்டும் என்றால், எல்.டி.எஃப். அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சரை யாரும் எப்போதும் சந்திக்கலாம், எதைப்பற்றியும் முறையிடலாம். இதே காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளடங்கிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றால் அதற்கு ஏராளான கட்டுப்பாடுகளும் வழிமுறைகளும் இருக்கும்.

இன்னும் 4 மாதம்
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகிறது என்றால், அங்கு இன்னும் 4 மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்த முடிவுகள் எதிரொலிக்கக் கூடும் என்பதால் தான். இதனிடையே நண்பகல் 12 மணி நிலவரப்படி கேரளாவில் உள்ள 6 மாநகராட்சிகளில் எல்.டி.எஃப் மூன்றிலும், யு.டி.எஃப். மூன்றிலும் சரிசமமாக வெற்றிமுகத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications