கழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா
கேரளாவை சீரியல் கொலைகாரிகள் உலுக்கி எடுத்து உள்ளனர்
Recommended Video
திருவனந்தபுரம்: கொடூரக் கொலைகளை சர்வ சாதாரணமாக செய்து விட்டு கேஷுவலாக இருக்கிறார் ஜோலி.. ஒட்டுமொத்த கேரளாவே மிரண்டு போய் உள்ளது. ஆனால் இதெல்லாம் அந்த மாநிலத்தில் சர்வ சாதாரணமப்பா என்றே சொல்லத் தோன்றுகிறது.
கொடூரக் கொலைகளைச் செய்த பெண்கள் கேரளாவில் இதற்கு முன்பும் இருந்துள்ளனர். எலி விஷம் வைத்து தனது குடும்பத்தினரைக் கொன்ற செளம்யா.. பெற்ற மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மஞ்சுஷா.. இந்த வரிசையில் இப்போது ஜோலியும் இணைந்துள்ளார்.. அவ்வளவுதான்.
கேரளாவை உலுக்கியுள்ள ஜோலி கதைக்குப் போகும் முன்பு இதற்கு முன்பு சிக்கிய இரண்டு கொடூரக் கொலைகாரப் பெண்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.. அதுவும் நெஞ்சைப் பதற வைக்கும் கொலைகள்தான்.

விசாரணை
கேரளாவின் அழகிய மாவட்டங்களில் ஒன்றுதான் கன்னூர். இந்த மாவட்டத்தில் உள்ள படனக்கரா ஊரைச் சேர்ந்தவர் செளம்யா. இவர் ஒரு கொலை வழக்கில் சிக்கினார். விசாரணையை முடுக்கி விட்டபோதுதான் செளம்யா எவ்வளவு பெரிய கொடூர கொலைகாரி என்பது தெரிய வந்தது.

கள்ளக்காதல்
செளம்யாவுக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது. இது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தெரிந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செளம்யா 2 குழந்தைகள், மாமானார், மாமியாரை அடுத்தடுத்து கொலை செய்தார். எப்படி தெரியுமா.. சாப்பாட்டில் எலி விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொலை செய்தார்.

கைது
இந்தக் கொலைகள் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட இடைவெளியில் நடந்ததால் யாருக்கும் சந்தேகம் வராமல் போய் விட்டது. பின்னர் கைது செய்யப்பட்டார் செளம்யா. வழக்கு விசாரணையில் இருந்து வந்தபோது 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி செளம்யா சிறைக்குள்ளேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கொடூர கொலை
அடுத்து அனுசாந்து என்பவர் தனது கள்ளக்காதலைக் காப்பதற்காக, காதலனுடன் சேர்ந்து மாமியாரையும், தனது சொந்த மகளையும் கொடூரமாகக் கொலை செய்து சிக்கினார். இதேபோல இன்னொரு பெண்ணும் தனது கள்ளக்காதலுக்காக பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்து அதிர வைத்தார். அந்தப் பெண்ணின் பெயர் மஞ்சுஷா. நெடுமாங்காடு பரந்தோட்டு கரந்தலா என்ற ஊரைச் சேர்ந்தவர்.

தொடர்பு
இவரது 16 வயது மகள்தான் மீரா. அம்மா மீது ரொம்பப் பாசம். மஞ்சுஷாவுக்கும் மகள் மீது நிறையப் பாசம்தான். அப்பா இல்லை மீராவுக்கு. அங்குதான் தடம் மாறினார் மஞ்சுஷா. இன்னொருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அது நெருக்கமானது. இறுகிப் போனது. மீரா ஒரு தொல்லையாக, இடையூறாக தெரிய ஆரம்பித்தார் இருவருக்கும்.

ஜோலி
காமம் கண்ணை மறைத்ததால் மகள் மீதான பாசம் மறைந்து கோபம் வந்தது மஞ்சுஷாவுக்கு. பெற்ற மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். உடலை தூக்கி வீசி விட்டார். போலீஸார் துப்பு துலக்கி மஞ்சுஷாவைக் கைது செய்தபோது கேரளாவே அதிர்ந்து போனது. இன்று ஜோலி கைதாகியுள்ளார். அவர் செய்த கொலைகள்தான் அனைவரையும் பதற வைத்துள்ளன.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications