"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நான்கு வயது சிறுவன் ஷிகெல்லா (Shigella) பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொற்று குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன, அது எப்படிப் பரவுகிறது மற்றும் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இங்கே காணலாம்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த உலகையும் கொரோனா பாதிப்பு உலுக்கிப் போட்டது. அந்தப் பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் வரை ஆனது. இதனால் வேறு புதிய வைரஸ் அல்லது பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படும்போது அது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

Kerala Shigella Outbreak kerala India

ஷிகெல்லா பாதிப்பு

இந்தச் சூழலில் தான் கேரளாவில் வெறும் 4 வயதே ஆன சிறுவன் ஒருவன் இந்த ஷிகெல்லா பாதிப்பால் உயிரிழந்துள்ளான். இதனால் பொதுமக்கள் அதீத அச்சத்தில் இருக்கிறார்கள். ஷிகெல்லா என்பது குடல் பகுதியைத் தாக்கும் ஒரு வகைப் பாக்டீரியா தொற்று ஆகும். இது 'ஷிகெல்லோசிஸ்' (Shigellosis) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பாக்டீரியா குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்குகிறது. இது மிகவும் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது.

இந்த நோயின் முதல் அறிகுறியே கடுமையான வயிற்றுப்போக்கு தான். சில நேரங்களில் ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு கூட ஏற்படும். வயிற்று வலி மற்றும் பிடிப்பு கூட ஏற்படும். காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி, உடல் சோர்வு ஆகிய பாதிப்புகளும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

யாருக்கு அதிகப் பாதிப்பு?

இந்தத் தொற்று யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்றாலும், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இது அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனால் ஆபத்து அதிகம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சி அடையாததால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்குத் தீவிரமான நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறுநீரக மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பாதிப்பு எளிதாக ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஆபத்து

ஷிகெல்லா தொற்றின் மிகப் பெரிய ஆபத்தே உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதுதான். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் உடலில் உள்ள நீர் மற்றும் தாதுக்கள் வெளியேறிவிடும். தலைச்சுற்றல், அதிக தாகம், வாய் உலர்ந்து போதல், சிறுநீர் அளவு குறைதல், குழப்பமான மனநிலை மற்றும் ரத்த அழுத்தம் குறைதல் ஆகியவை ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

அசுத்தமான குடிநீர் குடிப்பது, சரியாகச் சமைக்கப்படாத அல்லது அசுத்தமான உணவைச் சாப்பிடுவது, கைகளைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடுவது, பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருப்பது ஆகியவை காரணமாக இந்த ஷிகெல்லா பாக்டீரியா வேகமாகப் பரவும்.

தடுப்பது எப்படி

மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ்களை போலவே சுகாதாரமான பழக்கங்களைப் பின்பற்றுவதே இதை தடுக்கும் சரியான வழியாகும்.

சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் சோப்பு போட்டு கைகளை நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். மேலும், சுத்தமான நீரைக் குடிப்பது, காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழிவு பயன்படுத்துவது, இறைச்சி மற்றும் உணவுகளை முழுமையாகச் சமைத்துச் சாப்பிடுவது, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது எனச் சுகாதாரமான பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+