திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடதுசாரி மாணவர்களிடம் சிக்கிய ஏபிவிபி மாணவர்.. அடி உதை.. வேட்டி அவிழ்ந்தது.. கேரள கல்லூரியில்

Google Oneindia Tamil News

Recommended Video

    இடதுசாரி மாணவர்களிடம் சிக்கிய ஏபிவிபி மாணவர்.. அடி உதை.. வேட்டி அவிழ்ந்தது.. கேரள கல்லூரியில்

    திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாஜகவின் மாணவர் இயக்கமான ஏபிவிபி தொண்டர், கேரளாவிலுள்ள ஒரு கல்லூரியில், இடதுசாரிகள் மாணவர் அமைப்பினரால் சரமாரியாக தாக்கப்பட்டு, வேட்டி அவிழ்க்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது.

    கேரளாவின் திருச்சூர் நகரிலுள்ள ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடக்கின்றன. குறிப்பாக மாணவர்கள் முழுக்க இதில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

    Kerala: Students Federation of India (SFI) workers thrash an ABVP worker

    இருப்பினும் ஏபிவிபி அமைப்பினர், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால் கேரளா இடதுசாரிகள் மாணவர் ஆதிக்கம் உள்ள மாநிலம். எனவே, எஸ்எப்ஐ மாணவர் அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

    எஸ்எப்ஐ மாணவர்கள் 4 பேரை, ஏபிவிபி மாணவர் அமைப்பினர், இன்று காலை தாக்கியுள்ளனர். இதற்கு பதிலடியாகவும் இந்த தாக்குதல் சம்பவம் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், நாடு முழுக்க மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு சூழ்நிலை நிலவி வருகிறது.

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டம்.. அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டம்.. அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?

    English summary
    Kerala: Students' Federation of India (SFI) workers thrash an ABVP worker at Sree Kerala Varma College, Thrissur. ABVP had called for a strike on campus today following an altercation with SFI on Dec 16. ABVP had also allegedly thrashed 4 SFI workers earlier today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X