Kerala Lottery Result: கேரளா சம்மர் பம்பர் லாட்டரி: ரூ.10 கோடியை அப்படியே அள்ளிய பாலக்காடு! டிக்கெட் நம்பர் இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெறது. கேரளாவில் கடந்த இரு மாதங்களாக சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை சூடு பறக்க நடந்து வந்தது. முதல் பரிசு ரூ. 10 கோடி என்பதால் யாருக்கு இவ்வளவு பெரிய தொகை அடிக்கப் போகின்றதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாலக்காடில் டிக்கெட் வாங்கியவருக்கு முதல் பரிசு அடித்துள்ளது.
அதிர்ஷ்டம் என்பது எதில் பொருந்துகிறதோ இல்லையோ, லாட்டரிக்கு பொருந்தும். லாட்டரியில் பரிசு யாருக்கு அடிக்கும், எப்போது அடிக்கும் என சொல்ல முடியாது. பல வருடங்களாக விடாமல் லாட்டரி சீட்டுக்கள் வாங்கி இதுவரை ஒருமுறை கூட பரிசு அடிக்காதவர்களும் உள்ளனர், வாங்கிய ஒரே சீட்டில் பரிசு அடித்தவர்களும் உண்டு.

இன்று குலுக்கல்
கேரளாவை பொறுத்தவரை அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், வருடத்திற்கு 6 சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான கேரள சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது.
கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெற்றது. கேரளாவில் சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு நடுவிலும் அங்கு சம்மர் பம்பர் டிக்கெட்டின் விற்பனை களை கட்டி வந்தது. இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.250 ஆகும்.
ரூ.10 கோடி யாருக்கு?
முதல் பரிசாக ரூ.10 கோடியும் இரண்டாவது பரிசாக ரூ.1 கோடியும் அளிக்கப்படுகிறது. முதல் பரிசாக 10 கோடி அளிக்கப்படுவதால் வாழ்க்கையில் நமக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். மொத்தம் 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான பாலக்காட்டில் வழக்கம் போல அதிக டிக்கெட்டுகள் விற்றுள்ளன. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிக டிக்கெட் விற்பனையாகும் இடமாக பாலக்காடு மாவட்டமே உள்ளது. அதேபோல, பரிசுத்தொகையும் இந்த மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கே அதிகம் அடித்தையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
பாலக்காடில் டிக்கெட் வாங்கியவருக்கு
கடந்த இரண்டு மாதங்களாக அனல் பறக்க நடைபெற்று கொண்டிருந்த டிக்கெட் விற்பனையின் இறுதி நாளான இன்று அதிர்ஷ்ட எண் எது என்பது தெரிந்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் லாட்டரி அலுவலகத்தில் இதற்கான குலுக்கல் நடைபெற்றது. இதனால் யாருக்கு பரிசு அடிக்கப் போகிறதோ என லாட்டரி பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதேபோல் தாங்கள் வாங்கி வைத்திருக்கின்ற டிக்கெட்டுக்கு பரிசு விழுமா எனவும் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் முதல் பரிசு ரூ.10 கோடி “SB 517026” என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது, P 4289 என்ற முகவர் எண்ணைக் கொண்ட எஸ் மதுசூதனன் என்பவரது ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆறுதல் பரிசுத் தொகையான ரூ.1,00,000 அதே டிக்கெட் எண் கொண்ட “517026” மற்ற தொடர் டிக்கெட்டுகளுக்கு (SA 517026, SC 517026, SD 517026, SE 517026, SG 517026) வழங்கப்படுகிறது.
இரண்டாம் பரிசு ரூ.1 கோடி
இரண்டாம் பரிசான ரூ.1 கோடியை, சிற்றூரைச் சேர்ந்த SE 660573 என்ற டிக்கெட் எண் வென்றுள்ளது. இந்த டிக்கெட்டை R. ஃபர்சானா என்பவரது ஏஜென்சியில் (முகவர் எண்: P 4038) விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது பரிசாக ரூ.1 கோடியும் மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 12 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. நான்காவது பரிசாக ரூ.1 லட்சம் கடைசி 5 டிஜிட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் ஆகும். அதாவது முதல் பரிசு வென்ற அதே எண் டிக்கெட்டில் இருந்து சீரியல் எண் மட்டும் மாறியிருந்தால் ஆறுதல் பரிசு அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications