ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் காரை ஓட்டிய டிரைவர்.. போலீசார் செய்த மறக்க முடியாத சம்பவம்.. தேவைதான்
திருவனந்தபுரம்: ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் காரை ஒட்டிச்செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பத்தில் தொடர்புடைய காரின் உரிமையாளரை பதிவெண்ணை வைத்து அடையாளம் கண்டு கொண்ட போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிகளை மீறி ஒட்டியதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
சாலைகளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்டால், வாகன ஓட்டிகளுக்கு அடுத்த நொடியே நெஞ்சம் பதறும்.. சிக்னல்களில் நின்றால் கூட எப்படியாவது வழிவிட்டுவிட வேண்டும் என தொடர்ந்து ஹார்ன் அடித்து வழி ஏற்படுத்தி விடுவதை சென்னை போன்ற பெரு நகரங்களில் தினசரி காண முடியும்.

பெரிய போராட்டங்கள், சாலை மறியல் நடந்தாலும் கூட ஆம்புலன்ஸ்களுக்கு தனி வழியை உடனடியாக மக்கள் ஏற்படுத்தி கொடுத்து விடுவார்கள். இது போன்ற செயல்கள் ஒவ்வொரு நபரின் மனிதாபிமான குணத்தை வெளிக்காட்டுவதாக அமையும். ஆனால், ஒரு சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வண்டிக்கு கூட வழிவிடாமல் ஒரு சிலர் இரக்கமின்றி நடந்து கொள்ளும் காட்சிகள் வேதனை அளிப்பதாக உள்ளன.
இதேபோன்ற ஒரு சம்பவம் தான் கேரளா மநிலத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளனர். அது பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்.
கேரளாவின் திரிச்சூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பொன்னனியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் சலக்குடி அருகே சென்ற போது வெள்ளை நிற மாருதி செடான் ரக கார் ஒன்று ஆம்புலன்ஸ்குக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ்க்கு முன்னால் சென்ற அந்த காரானது வழி விட முயற்சிக்கவில்லை.
ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே முந்தி செல்ல முற்ப்பட்டார். ஆனாலும் அந்தக் கார், ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்சில் இருந்தவர்கள் இந்தக் காட்சிகளை தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் கார் டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில்தான் காரின் பதிவெண்னை வைத்து காரை ஓட்டியவரை அடையாளம் கண்ட போலீசார், போக்குவரத்து விதியை மீறி நடந்து கொண்டதற்காக ரூ.2.5 லட்சம் அபரதமாக விதித்துள்ளனர். மோட்டார் வாகன விதிகளின் படி, ஆம்புலன்ஸ்க்கு வழி விடவில்லை என்றால் ஆறு மாதம் வரை சிறை தண்டனை அல்லது ரூ.10,000 விதிக்கலாம். அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து போலீசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. முன்னதாக இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கார் டிரைவரின் செயலை கடுமையாக கண்டித்து இருந்தனர். காரின் டிரைவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் இது போன்ற இரக்கமின்றி நடந்து கொண்ட டிரைவரின் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டு இருந்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications