கேரளா உள்ளாட்சித் தேர்தல்: முதல் முறையாக வாக்களித்த இடுக்கி 'பழங்குடிகள்'
பீர்மேடு: கேரளாவில் முதல் முறையாக தங்களது வாக்குரிமையை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி இருக்கின்றன பழங்குடி மக்கள்.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் உள்வனப்பகுதியில் வெளி உலகத் தொடர்பு இல்லாத பழங்குடிகள் இன்னமும் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடி மக்கள் இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களித்தது இல்லை.

தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டது. பழங்குடிகளில் 31 பேருக்கு வாக்குரிமை கொடுத்து வாக்களிக்க அழைத்துச் சென்றனர் அரசு அதிகாரிகள்.
ஆனால் இவர்களில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க வந்தனர். எஞ்சிய 14 பேரும் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வந்து வாக்களிக்க மறுத்துவிட்டனர். 9 பேர் வண்டிப் பெரியாறு சத்திரம் வாக்குச் சாவடியிலும் 8 பேர் வல்லக்கடவு வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
வனப்பகுதிகளில் வேட்டையாடுதலையும் உணவுப் பொருட்கள் சேகரிப்பையும் பிரதான தொழிலாக கொண்டவர்கள் இந்த பழங்குடிகள். வாக்களிப்பதற்காகவே முதல் நாள் இரவு 17 பேரும் வண்டிப் பெரியாறு சத்திரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாரம்பரிய உடைகளுக்கு பதிலாக மாற்று உடைகள் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அழைத்துச் சென்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications