திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரவெல்லாம் அழுத விஸ்மயா.. மிரள வைத்த வாட்ஸ்அப் சேட்டிங்.. பகீர் வாக்குமூலம் தந்த கணவன்

விஸ்மயா கணவருக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மனைவியுடன் சண்டை போட்டது உண்மைதான், ஆனால், அந்த வாட்ஸ்அப் போட்டோக்கள் எதுவுமே உண்மையில்லை என்று இளம்பெண் மர்ம மரணம் தொடர்பாக கணவர் போலீசில் கூறியுள்ளார்.

Recommended Video

    Kerala Vismaya மரணத்தில் ஷாக் திருப்பம் | Postmortem Report | Oneindia Tamil

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் விஸ்மயா.. கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டு இருந்தவருக்கு திடீரென கிரண்குமார் என்ற மாப்பிள்ளையை பார்த்து கல்யாண செய்து வைத்துள்ளனர்.

    100 பவுன் நகை, டொயாட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் உட்பட ஏராளமான சீர்களை பெண்ணுக்கு தந்துள்ளனர்.. ஆனால், நாளுக்கு நாள் வரதட்சனை கொடுமை கணவர் வீட்டில் வெடித்துள்ளது.. கணவரின் கொடுமையான தாக்குதல்களுக்கு இளம் பெண் விஸ்மயா ஆளானார்.

    விருதுநகர்: கணவன் -மனைவி இடையே சண்டை.. உள்ளே வந்த மாமியார்.. நடந்த கோர விபரீதம் விருதுநகர்: கணவன் -மனைவி இடையே சண்டை.. உள்ளே வந்த மாமியார்.. நடந்த கோர விபரீதம்

     சித்ரவதை

    சித்ரவதை

    உடம்பெல்லாம் கட்டையால் அடித்து தாக்கி உள்ளார்.. ஆணியால் குத்தி சித்ரவதை செய்துள்ளார்.. இந்த விஷயம் எல்லாம் பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார் விஸ்மயா.. இறுதியில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்துவிட்டார்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது..

    தற்கொலை

    தற்கொலை

    அதில், விஸ்மயா தூக்கில் தொங்கி இறந்துள்ளது முதல்கட்டமாக தெரியவந்தாலும், தன் மகளை கிரண்குமார் அடித்து கொன்றுவிட்டதாக போலீசாரிடம் பெற்றோர் கதறி புகார் தெரிவித்தனர். மரணத்துக்கு முன்னதாக, தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட காயத்தையும் உறவினர்களுக்கு விஸ்மயா வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார்..

     போட்டோக்கள்

    போட்டோக்கள்

    இந்த போட்டோக்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போதுதான் அதாவது நேற்றிரவு கிரண்குமார் போலீசில் சரண் அடைந்தார்.. கிரண் குமார் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக இருந்திருக்கிறார்.. தனக்கு வரதட்சணையாக தரப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை என்று சொல்லி, அதற்கு பதிலாக பணம் கேட்டதாகவும், அதனாலேயே மனைவியிடம் தகராறு வந்ததாகவும் போலீசில் சொல்லி உள்ளார்.

     வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இதுகுறித்து வாக்குமூலத்தில் கிரண்குமார் மேலும் சொன்னதாவது: "2 நாட்களுக்கு முன்பாக எங்கள் 2 பேருக்கும் சண்டை நடந்தது உண்மை தான்... அதனால் இரவெல்லாம் அழுது கொண்டிருந்தாள்.. ஆனால் தற்போது அவரை அடித்தது போல் காயங்களுடன் வரும் போட்டோக்கள் எதுவும் உண்மையில்லை.. எல்லாம் போலியானவை.. உறவினர்கள் சொல்வதும் பச்சை பொய்" என்று கூறியுள்ளார்.

     காவல்

    காவல்

    இதனைத் தொடர்ந்து இவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். இவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது... எனினும் விஸ்மயா எப்படித்தான் இறந்தார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

    English summary
    Kerala Vismaya death case, and husband confessed to police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X