திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூச்சுவிட முடியல.. உயிருக்கு போராடிய நோயாளி.. கடைசி நேரத்தில் ஆபத்பாந்தவர்களாக வந்த இருவர்.. அதிசயம்

தொற்று நோயாளியை பைக்கில் உட்கார வைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

Google Oneindia Tamil News

ருவனந்தபுரம்: ஒரு கொரோனா நோயாளிக்கு, உயிர் இழுத்து கொண்டிருந்தது.. ஆனால், கடைசி நேரத்தில் அவரை 2 பேர் மீட்டு அந்த நோயாளியை காப்பாற்றி உள்ளனர்..!

கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது.. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்..

அதேபோல, தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி தென்படாதவர்கள் அவரவர் வீடுகளிலும், பொது இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

அன்னிக்கு அவ்வளவு பேசினாரே யோகி.. அன்னிக்கு அவ்வளவு பேசினாரே யோகி.. "ஆக்சிஜனே இல்லை".. ஓபன் லெட்டர் எழுதிய பாஜக எம்பி..!

தொண்டர்கள்

தொண்டர்கள்

இதுபோன்று தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளை செய்யவே தன்னார்வ தொண்டர்கள் முழுமையாக களத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்... கேரளாவை பொறுத்தவரை, இந்த தன்னார்வ தொண்டர்கள்தான் இப்போதைக்கு பெருமளவில் உதவி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஆலப்புழா மாவட்டம் புன்னப்புரா பஞ்சாயத்தில் டிசிடி என்ற சென்ட்டர் உள்ளது.. இங்குதான் தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்...

சாப்பாடு

சாப்பாடு

இவர்களுக்கு ஆலப்புழா பகவதிகால் யூனிட் டிஒய்எஃப்ஐ அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் உதவி வருகிறார்கள்.. அந்த வகையில், அஸ்வின் மற்றும் ரேகா மோள் என்ற 2 தன்னார்வலர்களும் அடக்கம். இவர்கள் 2 பேரும், அந்த கொரோனா சென்ட்டருக்கு சாப்பாடு எடுத்து கொண்டு போனார்கள்.. அப்போது 3வது மாடியில். நோயாளி ஒருவர் மூச்சு திணறி கொண்டிருந்தார்.. அவரை பார்த்ததும், அஸ்வினும், ரேகாவும் பதறி போய்விட்டனர்.. அவரை தூக்கி கொண்டு, உடனடியாக 3வது மாடியில் இருந்து கீழே இறங்கினர்..

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

இதை பார்த்ததும், அங்கிருந்தோர் ஆம்புலன்சுக்கு போன் செய்தார்கள்.. ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு 10 நிமிஷத்துக்கு மேல் ஆகும் என்று சொன்னார்கள்.. ஆனால், அதுவரை மூச்சு திணறி கொண்டிருக்கும் நோயாளியை வைத்திருக்க முடியாது என்பதால், டக்கென பைக்கை எடுத்தார் அஸ்வின்.. பின்னாடி ரேகா உட்கார்ந்து கொள்ள, நடுவில் அந்த தொற்று பாதித்த நோயாளியை உட்கார் வைத்து கொண்டு கிளம்பினர்..

 சிகிச்சை

சிகிச்சை

பக்கத்திலேயே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் அவரை சேர்த்தனர்.. அதன்பிறகு அவருக்கு உடனடியாக சிகிச்சை தரப்பட்டது.. இப்போது அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.. அஸ்வினும், ரேகாவும் பைக்கில் நோயாளியை வைத்து கொண்டு சென்ற போட்டோ சோஷியல் மீடியாவில் பரவியது..

தொற்று

தொற்று

அத்துடன் இவர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.. தொற்று பாதித்தவர் இருந்தால், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அந்த ஏரியா பக்கமே யாருமே செல்வது இல்லை.. ஆனால், தொற்று இருப்பது தெரிந்தும், அவரை தொட்டு தூக்கி இருவரும் காப்பாற்றி உள்ளனர்.. பாதுகாப்பாக முழுக்க பிபிஇ கிட் அணிந்திருந்ததால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிகிறது.

மனிதம்

மனிதம்

இதை பற்றி ரேகா சொல்லும்போது, "நோயாளிக்கு மூச்சுவிடவே முடியவில்லை.. 2 நிமிஷம் விட்டிருந்தாலும் கஷ்டம்தான்.. அதனால், அஸ்வின் பைக் ஓட்டினார்... நோயாளியை நடுவில் உட்கார வைத்து நான் பின்னால் உட்கார்ந்து கொண்டேன்.. அந்த தனியார் மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்ய மறுத்தனர்... அதற்கு பிறகு நோயாளியின் மோசமான நிலையை பார்த்துதான் அட்மிட் செய்தார்கள்.. ஒருவேளை நாங்கள் பிபிஇ கிட் அணியாமல் இருந்திருந்தாலும், அவரை பைக்கில் அழைத்து சென்றிருப்போம். அதனால் எங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால், ஒரு உயிரை காப்பாற்றுவது அதைவிட முக்கியம் அல்லவா?" என்கிறார்.

English summary
Kerala volunteers shift patient to hospital in bike went, and video viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X