24 பேர் பலி: குவைத் புறப்பட்டார் கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ்! நிவாரண உதவி அறிவித்த முதல்வர் பினராயி!
திருவனந்தபுரம்: குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் புறப்பட்டுச் சென்றார்.
குவைத்தின் மன்கஃப் நகரில் 6 மாடி அடுக்கு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 இந்தியர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கேரளாவைச் சேர்ந்த 24 பேரில் 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் குவைத் தீ விபத்தில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.
இதனிடையே கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பலியான நிலையில் அம்மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்றடைந்துள்ளார்.
குவைத்தில் 50-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த கொடிய தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவை சேர்ந்த ஆபிரகாம்தான் இக்கட்டிட உரிமையாளர். கட்டிட உரிமையாளர் ஆபிரகாமை உடனே கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டிருந்தது.
குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள் குறித்த விவரம் தற்போதுதான் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. குவைத் தமிழ்ச் சங்கங்கள் உதவியால் இந்த தகவல்களைத் தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறை அவசர உதவி எண்களையும் அறிவித்திருந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications