நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்தா?.. 4 நாட்களாக காணவில்லை? பிரபல இயக்குநர் பரபரப்பு பதிவு!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த சில நாட்களாக காணவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை 4 நாட்களாக காணவில்லை.

அவர் கந்துவட்டிக்காரர்களின் காவலில் இருக்கிறார். அவருடைய மேனேஜர்கள் பினீஷ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரின் பெயர்களையும் அவர் வீட்டுக் காவலில் இருப்பதாக நம்புவதற்கான காரணங்களையும் நான் பதிவிட்டு இருந்தேன்.

4 நாட்கள்

4 நாட்கள்

ஆனால் இந்த பதிவை போட்டு 4 நாட்களாகியும் இதுவரை மஞ்சு வாரியரோ அவர் சம்பந்தப்பட்டவர்களோ இதுவரை பதிலளிக்கவில்லை. மஞ்சு வாரியரின் மவுனம் எனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. மலையாள திரையுலகில் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் Women in cinema Collective அமைப்பிற்கும் ஈமெயில் அனுப்பியுள்ளேன்.

 மவுனம் காக்கும் மஞ்சு

மவுனம் காக்கும் மஞ்சு

அவர்களும் இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்கள். இதை நான் சமூகவலைதளங்களில் கூறும் போது பலரும் இந்த மிகத் தீவிரமான பிரச்சினையை நகைச்சுவையாக பார்க்க முயற்சிக்கிறார்கள். கேரளாவில் உள்ள ஊடகங்கள் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிக்க முயல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் இயக்குநர் கவலை

பேஸ்புக்கில் இயக்குநர் கவலை

தேசிய அளவில் பாராட்டப்பட்ட ஒரு நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டிருப்பதால், தேசிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என அந்த பேஸ்புக் பதிவில் சசிதரன் தெரிவித்துள்ளார்.

 மற்றொரு பதிவு

மற்றொரு பதிவு

இதுகுறித்து மற்றொரு பதிவில் அவர் கூறுகையில் மஞ்சு அவர்களே என்னால் எதையும் செய்ய முடியாது என கருதுகிறேன். மவுனம் என்பது எப்போதுமே நல்ல தந்திரம் அல்ல. மவுனத்தை கலைத்துவிட்டு இந்த உலகை பாருங்க. நடித்தே வாழ்க்கையை வாழலாம் என நீங்கள் போடும் கணிப்புகள் தவறு என்பதை நான் எப்போது உணர்வேன். அது இப்போது உண்மையாகிவிட்டது.

கடவுளிடம் பிரார்த்தனை

கடவுளிடம் பிரார்த்தனை

இதற்கு மேல் என்னால் எதையும் செய்ய முடியாது என்ற வேதனை இருந்தாலும் இதுதான் வாழ்க்கையின் நாடகம் என்ற சிறிய புன்சிரிப்பு அதை மறைக்கிறது. குறைந்தபட்சம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சணல்குமார் சசிதரன் தெரிவித்துள்ளார். இதனால் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மஞ்சுவாரியர் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+