லோக்சபா தேர்தல்: ராகுல் காந்தி, ஆனி ராஜா, சுரேஷ் கோபி, ஷைலஜா டீச்சர்.. விபிஐ தொகுதிகள் நிலவரம் என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 26-ந் தேதி நடைபெற உள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த இடதுசாரித் தலைவர் ஆனி ராஜா, மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர், மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், முரளீதரன் உள்ளிட்டோர் விஐபி வேட்பாளர்கள்.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 20 தொகுதிகளிலும் புதன்கிழமை மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். இத்தொகுதியின் சிட்டிங் எம்பியான காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மீண்டும் களம் காண்கிறார். இடதுசாரி மூத்த தலைவர் பன்னியன் ரவீந்தரன் களத்தில் உள்ளார். இதனால் திருவனந்தபுரத்தில் வலிமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2009-ம் ஆண்டு தேர்தலில் முதன் முதலில் சசி தரூர் வென்றார். 2014-ம் ஆண்டு தேர்தலில் சிபிஐ-ன் ராமச்சந்திர நாயரை தோற்கடித்தார். 2019-ல் பாஜகவின் மூத்த தலைவர் ஓ.ராஜகோபாலைத் தோற்கடித்தவர் சசி தரூர். 2014-ம் ஆண்டு தேர்தலில் இடதுசாரி ஆதரவு சுயேட்சை வேட்பாளர் பென்னெட் ஆபிரகாம் 3-வது இடம்தான் பிடித்தார். 2019-ல் பாஜகவின் கும்மனம் ராஜசேகரனைத் தோற்கடித்தார் சசி தரூர். தற்போது 4-வது முறை வெற்றிக்காக காத்திருக்கிறார் சசி தரூர்.
திருச்சூர்: திருச்சூர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் திருச்சூரில் போட்டியிட்ட சுரேஷ் கோபி 28.19% வாக்குகளுடன் 3-வது இடம்தான் பிடித்தார். அதே நேரத்தில் 2014-ல் பாஜகவின் ஸ்ரீசன் 11.15% வாக்குகளைத்தான் திருச்சூரில் பெற்றிருந்தார். இதனால் இம்முறை மீண்டும் நடிகர் சுரேஷ் கோபிக்கே போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது பாஜக மேலிடம். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றிருந்த போதும் தளராத நம்பிக்கையுடன் சுரேஷ் கோபி, லோக்சபா தேர்தலில் களம் காண்கிறார். கேரளா காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் முரளீதரன், இடதுசாரி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சுனில் குமார் களம் காண்கின்றனர். 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை திருச்சூர் எம்.எல்.ஏ.வாக இருந்தார் சுனில் குமார். திருச்சூரில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 35%, இஸ்லாமியர்கள் 16% உள்ளனர். இந்த சிறுபான்மையினர் வாக்குகளை 3 கட்சிகளுமே குறி வைக்கின்றன.
கேரளாவில் ஏப்.26-ல் தேர்தல்: 20 தொகுதிகளில் 194 பேர்.. 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை!
பத்தனம்திட்டா: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். தன் மகன் இத்தொகுதியில் தோற்கடிக்கப்பட வேண்டும் என பிரசாரம் செய்கிறார் ஏகே ஆண்டனி. முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த இடதுசாரித் தலைவருமான தாமஸ் ஐசக், சிபிஎம் வேட்பாளராக போட்டியிடுகிறார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அதிகமான வாக்காளர்களாக கொண்ட தொகுதி இது. 2009, 2014, 2019-ல் காங்கிரஸின் ஆண்டோ ஆண்டனிதான் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றிருந்தார்.
வடகரா: வடகரா தொகுதியில் இடதுசாரித் தலைவரான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா டீச்சர் போட்டியிடுகிறார். காங்கிரசின் ஷாபி பரம்பில் வேட்பாளராக களம் கான்கிறார். பாஜக சார்பில் பிரபுல் கிருஷ்ணா நிறுத்தப்பட்டுள்ளார்.
வயநாடு: ஒட்டுமொத்த தேசமும் எதிர்பார்க்கும் தொகுதி வயநாடு. இத்தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். ராகுல் காந்திக்கு எதிராக களம் காண்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனிராஜா. தமிழ்நாட்டு மருமகள் ஆனி ராஜா. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே “இந்தியா” கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் வயநாடு தொகுதியில் மூர்க்கமாக மோதிக் கொண்டு நிற்கின்றன.
அட்டிங்கல்: மத்திய அமைச்சர் வி.முரளீதரன், பாஜக வேட்பாளராக களம் காண்கிறார். இத்தொகுதியில் சிட்டிங் எம்பி காங்கிரஸின் அடூர் பிரகாஷும் சிட்டிங் எம்.எல்.ஏ. வி.ஜோய், சிபிஎம் வேட்பாளராகவும் களம் காண்கின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications