Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயநாட்டை விட்டு கொடுக்கிறாரா ராகுல் காந்தி? காங். தலைவர் சூசகம்! போகாதீங்க பிரதர்.. வீடியோ ட்ரெண்ட்

Subscribe to Oneindia Tamil

கேரளா: வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ய இருப்பதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அன்னி ராஜா தெரிவித்துள்ளார். அதற்குக் கேரள காங் தலைவர் சூசகமாகப் பதிலளித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் ராகுல் காந்தி என்று பலதரப்பட்ட எதிர்பார்ப்புகள் தேர்தல் தேதி வெளியான உடனேயே நிலவின. அதில் எந்தக் குழப்பமும் இல்லாமல் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி வழக்கம் போல் தேர்வு செய்தார்.

lok sabha election 2024 INDIA alliance Wayanad Raebareli

அப்போது அவர் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் வேட்பாளரையே எதிர்த்துப் போட்டியிடுகிறார். இதுதான் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளுக்குள் இருக்கின்ற குழப்பம் என்று எதிர்க்கட்சியான பாஜக விமர்சனம் செய்தது.

ஆனாலும், எந்த மனத்தடையும் இல்லாமல் ராகுல் வயநாட்டில் போட்டியிட்டார். இந்த 2024 மக்களவைத் தேர்தலில் கேரளாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங் வேட்பாளர்கள் மொத்தம் 14 பேர் வெற்றி பெற்றனர்.

அதாவது மொத்தம் 20 தொகுதிகளில் காங்கிரஸ் மொத்தம் 14 தொகுதிகளை வென்றுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த முறை ராகுல் வயநாடு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019இல் அவர் இந்தத் தொகுதியுடன் சேர்த்து அமேதியிலும் நின்றார். ஆனால், அங்கே ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில்தான் அவரது குடும்ப செல்வாக்கு மிக்க தொகுதியாகக் கருதப்படும் ரேபரேலி தொகுதியின் எம்பி ஆக இருந்த சோனியா காந்தி ராஜ்சபா உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார்.

lok sabha election 2024 INDIA alliance Wayanad Raebareli

ஆகவே, அவரது பாரம்பரிய தொகுதியாக ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனக் கருதப்பட்டது. ஆனால், அங்கே திடீரென்று ராகுல் களம் கண்டார்.

வயநாடு தொகுதியில் ராகுல் இந்த முறை 647445 வாக்குகளைப் பெற்று 364422 ஓட்டு வித்தியாசத்தில் அன்னி ராஜாவை தோற்கடித்துள்ளார்.

உபியில் உள்ள ரேபரேலி தொகுதியில் ராகுல் 687649 வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளரை 390030 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் உபியில் மொத்தம் 6 தொகுதியில்தான் வென்றுள்ளது. அத்துடன் ஒப்பிடுகையில் கேரளாவில் 14 பேர் வென்றுள்ளனர். கூடவே ரேபரேலி அவரது குடும்பத்தின் பாரம்பரியமான தொகுதி.

lok sabha election 2024 INDIA alliance Wayanad Raebareli

இந்திரா காந்தி காலத்தில் தொடங்கிய பந்தம் இன்றுவரை வழிவழியாக நீடிக்கிறது. வயநாடு அப்படி இல்லை.

வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில், ராகுல் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. சுதாகரன், "ராகுல் காந்தி வயநாட்டை விட்டு வெளியேறுகிறார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. வயநாட்டிலிருந்து ராகுல் காந்தி இந்தியாவை வழிநடத்த முடியாது. ஆகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

ராகுல் காந்தி வயநாட்டை விட்டு வெளியேற உள்ளதை நினைத்து ஒரு அம்மா அழுது கொண்டிருந்தார். அது என்னையும் வருத்தமடையச் செய்தது. ஆனால், இதற்காக நாம் சோகமாக இருக்க வேண்டியதில்லை. அதை அனைவரும் புரிந்து கொண்டு அவருக்கு அனைத்து விருப்பங்களையும் ஆதரவையும் வழங்க வேண்டும்" என்றார் அவர்.

இதற்கிடையில், வயநாட்டை விட்டு ராகுல் வெளியேறக் கூடாது என்று காங்கிரஸ் தொண்டர்கள் பதாகைகளைத் தாங்கிப் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றன. அப்படி அவர் எம்பி பதவியை ராஜினாமா விட்டு வெளியேறினால், பிரியங்கா காந்திக்கு அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோ பதிவு ஒன்றில், "அன்புள்ள பெரிய சகோதரர் ராகுல்ஜி, தயவுசெய்து எங்களை விட்டுவிடாதீர்கள். நீங்கள்தான் எங்கள் சிறந்த நம்பிக்கை. உங்களால் முடிந்தால், எங்களைக் கவனித்துக் கொள்ளும்படி சகோதரியிடம் (பிரியங்காஜி) கேட்டுப் பாருங்கள்" எனப் பதாகையைக் காட்டி வேண்டு கோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால், காந்தி குடும்பத்திலிருந்து ராகுல் மட்டுமே தேர்தல் களத்தில் தொடர உள்ளதாக அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது மேலிடம். ராகுலுக்குப் பதிலாகக் கேரளாவில் உள்ள காங் மூத்த தலைவர்கள் யாரேனும் பரிந்துரைக்கப்படுவார் என்றும் கூறியிருக்கிறது.

ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட அன்னி ராஜா, இது தொடர்பாக சில கருத்துகளை கூறியுள்ளார். ராகுல் வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ராகுல் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றாலும் கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அவருக்கு இந்த முறை 67,348 வாக்குகள் குறைந்துள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் ரேபரேயில் அவர் 390030 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தியுள்ளார். இது ஒரு அபார வெற்றி.

ஆகவேதான் ரேபரேலியை தக்கவைத்துக் கொண்டு வயநாடு பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார் ராகுல்.

அதாவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதியளித்துள்ளது. ஆனால், அவர் வெற்றி பெற்ற பிறகு 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால் அவரது எம்பி பதவியை இழக்க நேரிடும். ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்பி ஆக இருக்கச் சட்டம் அனுமதிக்கிறது.

1996 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, ஒருவர் போட்டியிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கைக்கு எந்த விதமான கட்டுப்பாடும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+