ராகுல் காந்தி அதிரடி.. கேரளா வயநாடு தொகுதியில் போட்டி.. அமேதியிலும் தேர்தலை சந்திக்கிறார்!
கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
திருவனந்தபுரம்: கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் நெருங்கிவிட்டது.இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் பலர் எங்கே போட்டியிட போகிறார்கள் என்பது குறித்த பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எங்கே போட்டி
கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் விரைவில் வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் ஏப்ரல் 11 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் லோக் சபா தேர்தல் நடக்க உள்ளது.

விருப்பம் தெரிவித்துள்ளார்
கேரளாவில் போட்டியிட ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக விருப்பம் தெரிவித்து இருக்கிறார். இதற்கான பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கேரளா காங்கிரசார் இடையே பெரிய மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

ஏற்கனவே கேட்டனர்
கேரளா காங்கிரஸ் ஏற்கனவே ராகுல் காந்திக்கு இதுகுறித்து கோரிக்கை வைத்து இருந்தது. லோக்சபா தேர்தலில் எங்கள் மாநிலத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அமேதி தொகுதி
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியிலும் இந்த முறை போட்டியிட இருக்கிறார். இரண்டிற்கும் அவர் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications