கொரோனா அறிகுறி.. கேரளாவிலிருந்து எஸ் ஆன மதுரைக்காரர்.. வளைத்துப் பிடிக்க அதிகாரிகள் தீவிரம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையை சேர்ந்த இளைஞர் திடீரென நேற்று தலைமறைவாகி விட்டதால் சுகாதாரத்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவில் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் பத்தினம்திட்டா அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிகிச்சையும் தரப்பட்டது. அப்போது தனக்கு கொரோனா எதுவும் இல்லை என்றும், சாதாரண காய்ச்சல் தான் எனவும் அந்த இளைஞர் கேரள சுகாதாரத்துறையினரிடம் வாதிட்டுள்ளார்.

இருப்பினும் அவரை வெளியே அனுமதித்தால் கொரோனா பாதிப்பு அதிகமாககூடும் என அஞ்சிய கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிவார்டிலேயே தங்கவைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அங்கிருந்து அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். இதனிடையே சொந்த ஊரான மதுரைக்கு அந்த இளைஞர் சென்றிருக்கக்கூடும் எனக் கருதிய அவர்கள் தமிழக சுகாதாரத்துறை உயரதிகாரிகளை தொடர்புகொண்டு விவரத்தை எடுத்துக்கூறியுள்ளனர்.
கேரளாவில் இருந்து மதுரைக்கு தப்பிவந்த இளைஞரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமானது என்றாலும், கொரோனா அறிகுறி உடைய அந்த நபரை கண்டுபிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளனர். மேலும், சமூக பொறுப்பை உணர்ந்து ஆரம்பக்கட்டத்திலேயே அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும் என கொரோனா சிறப்பு மருத்துவ பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், தங்கள் பகுதியிலோ அல்லது சுற்றத்திலோ கேரளாவுக்கு பணி நிமித்தமாக சென்று வந்தவர்கள் காய்ச்சலுடன் இருந்தால் அவர்களை பற்றிய தகவலை மதுரை அரசு மருத்துவமனையில் தெரிவிக்கலாம் என மதுரை மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications