சபரிமலையில் கூட்டம் அள்ளுது.. இந்த ஆண்டில் வருகை தந்த பக்தர்கள் எவ்வளவு தெரியுமா?
திருவனந்தபுரம்: சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனைக் காண குவிந்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் தற்போது வரை 25 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றுள்ளதாக தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலாக சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 18 ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐயப்பன் சிலைக்கு நெய் அபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கப்பட்டது. சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இந்தியா முழுவதும் இருந்து தினசரி சராசரியாக 70,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரள உயர்நீதிமன்றம் சபரிமலை தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு சில முக்கிய உத்தரவுகளை வழங்கியுள்ளது. விஜபிகளுக்கான சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்க கூடாது என்றும், பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை சீசனையொட்டி, நடப்பு ஆண்டில் இதுவரை சபரிமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டில் பக்தர்களின் கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்ய வே்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இந்த ஆண்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் நடத்தி திரும்பினர். அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்களும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டன.
கடந்த மூன்று நாட்களில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. 92 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால், சில மணி நேரம் மட்டும் பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். டிசம்பர் 18 ஆம் தேதி இரவு 10 மணி வரை 26 லட்சத்து 8 ஆயிரத்து 349 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 27 லட்சத்தைக் கடந்துள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜைக்கு 6 நாட்கள் மட்டுமே உள்ளன. பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசம்பர் 22 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்படுகிறது. 25 ஆம் தேதி மதியம் பம்பைக்கு வந்தடையும். அங்கு கணபதி தரிசனத்துக்குப் பின்னர் தலையில் சுமந்தபடி சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும். அன்றைய தினம் மாலை 6:30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும்
இதைத்தொடர்ந்து, டிசம்பர் 26 ஆம் தேதியில் மண்டல பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தப்படும். இரவு 10 மணிக்குமேல் நடை அடைக்கப்படும். பின்னர், மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications