Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவியும் பாலியல் புகார்கள்.. அதிரும் மலையாள திரையுலகம்.. பிரபல டைரக்டர் துளசிதாஸ் மீது நடிகை புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அடுத்தடுத்து குவியும் பாலியல் புகார்களால் மலையாள திரையுலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. இந்த நிலையில் மலையாள இயக்குனர் துளசிதாஸ் ஷூட்டிங்கின் போது தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை ஒருவர் கூறியுள்ளார். பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவித்ததால் என்னை தொடர்ந்து நடிக்க விடாமல் சினிமாவில் இருந்து ஓரங்கட்ட முயற்சி மேற்கொண்டனர் என்றும் அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை, பாலியல் அத்துமீறல், பாலியல் வன்கொடுமை என பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதிலும் சினிமா துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மலையாள நடிகைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி விசாரணை நடத்தியது.

Hema Committee Kerala

இந்த ஹேமா கமிட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு அறிக்கையினை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் தற்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், முக்கியமாக 15 பேர் கொண்ட மாபியாக்கள் பிடியில் தான் மலையாள திரையுலகமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகைகளை தேவையின்றி அரைகுறை ஆடைகளில் நடிக்க வைப்பது, நடிகர்களுடன் கட்டிப்பிடிக்கும், முத்தமிடும் ரொமான்ஸ் சீன்களை மட்டும் 17 முறை ரீடேக்குகள் வாங்குவது, சம ஊதியம் வழங்காதது, கழிப்பறை வசதி இல்லாதது என பல தொந்தரவுகள் தரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகத்தின் மீதான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு அடுத்தடுத்து நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். பிரபல மலையாள நடிகை ரேவதி சம்பத் மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இதனை தொடர்ந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து வின்னர் படத்தில் கட்டத்துரை என்ற பெயரில் நடித்த ரியாஸ் கான் மீதும் நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் கூறினார். தன் செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டு தன்னிடம் ஆபாசமாக பேசியதாக புகார் கூறினார். ஆனால் ரியாஸ் கான் இதனை மறுத்துள்ளார். தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகையை இப்போது தான் நான் டிவியில் பார்க்கிறேன் என்றும், இதற்கு முன் அவரை பார்த்ததே கிடையாது என்றும் அவர் கூறியது எதுவும் உண்மையில்லை என்றும் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராகுவேன் என்றும் ரியாஸ் கான் கூறியிருந்தார்.

இப்படி, அடுத்தடுத்து நடிகைகள் புகார் அளித்து வருவது மலையாள திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஒரு மலையாள நடிகை ஒருவர் மலையாள இயக்குனர் துளசிதாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள இயக்குனர் துளசிதாஸ் தனக்கு ஷூட்டிங்கின் போது பாலியல் தொந்தரவு அளித்தார் என்று அந்த நடிகை புகார் கூறியுள்ளார். இயக்குனர் துளசிதாஸ் மலையாளத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இது தொடர்பாக அந்த நடிகை கூறுகையில், "கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் துளசிதாஸ் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

அப்போதே நான் இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தேன். இந்த புகார் காரணமாக என்னை சினிமாவில் இருந்து ஓரங்கட்ட திட்டமிட்டனர். எனக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்தனர். தொடர்ந்து என்னை திரைப்படங்களில் நடிக்க விடாமல் செய்த முயற்சியில் வெற்றி பெற்றனர். இதுமட்டுமின்றி மலையாள நடிகர் பாபுராஜ் மீதும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

திரைப்படத்திற்கான வாய்ப்பு தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது அவரது வீட்டில் வைத்தே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார். என்னுடைய அனுமதியின்றி பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் பாலியல் புகார் அளித்து வருவது மலையாள திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இவ்வாறு நடிகைகள் அளிக்கும் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நடிகைகள் அளிக்கும் புகார்கள் குறித்து விசாரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+