ராத்திரி நேரம்.. நடிகை வீட்டுக்குள் எகிறி குதித்த "அக்பர்".. மேட்டரை கையில் எடுத்த பாஜக .. பரபரப்பு!
நடிகை வீட்டிற்குள் மர்ம நபர் அத்துமீறி நுழைந்துள்ளார்
திருவனந்தபுரம்: ராத்திரி நேரத்தில், ஒரு நடிகை வீட்டின் காம்பவுன்ட் சுவரை ஏறி குதித்து விட்டார் மர்ம நபர்.. அந்த விவகாரத்தை கேரள பாஜக இப்போது கையில் எடுத்துள்ளது..!
நடிகை அஹானா.. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.. பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள் இவர்.. மலையாள படங்கள் தவிர, தமிழிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார்... மேலும் ஒரு யூடியூப் சேனலையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.
எங்காவது வெளியூர், வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் போனால், அங்கிருக்கும் நிகழ்வுகளை அப்படியே வீடியோ எடுத்து தன்னுடைய சேனலில் அப்லோடு செய்துவிடுவார். இந்த வீடியோக்களுக்கு பல லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர்.

இரும்பு கேட்
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 9 மணி இருக்கும்.. இவர் வீட்டிற்கு ஒரு மர்ம நபர் வந்துவிட்டார்.. வீட்டை சுற்றி உள்ள காம்பவுண்ட் சுவரில் இரும்பு கேட் போட்டிருக்கிறார்கள்.. அந்த கேட்டை பிடித்து, இப்படியும் அப்படியும் அசைத்து கொண்டே நின்றார் அந்த நபர்.. இதை அஹானாவின் அப்பா பார்த்துவிட்டார்.. மாடியில் இருந்து, அந்த நபர் இரும்பு கேட்டை பிடித்து ஆட்டுவதையும் வீடியோ எடுத்துவிட்டார்.

தீவிர காதல்
பிறகு அந்த நபரிடம் என்ன ஏதென்று விசாரிக்க, அஹானாவை பாரக்க வேண்டும் என்று சொல்லியதுடன், திடீரென அந்த இரும்பு கேட்டை ஒரே தாவாக தாவி குதித்து வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார்.. அதற்குள் அங்கிருந்த செக்யூரிட்டிகள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெயர் பசில் உல் அக்பர் என்பது தெரியவந்தது.. இவருக்கு அஹானா என்றால் உயிராம்.. "ஒன்சைட் லவ்" வேறு.. எப்படியும் நேரில் பார்த்தே ஆக வேண்டும் என்றுதான் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்திருக்கிறார்.

கஞ்சா
ஆனால், அந்த நேரத்தில் அக்பர் கஞ்சா சாப்பிட்டு போதையில் வந்துள்ளார்.. நடிகை வீட்டில் மர்ம நபர் சுவர் ஏறி குதித்து விட்டார்.. இவ்வளவுதான் விஷயம்.. ஆனால், இந்த சம்பவம்தான் பல்வேறு விவாதங்களை கேரளாவில் கிளப்பி விட்டு வருகின்றது.. இதற்கு பாஜகவின் மாநில தலைவர் சுரேந்திரன் வரிந்து கட்டி கொண்டு வந்துள்ளார்.வீட்டிற்குள் நுழைந்த அக்பரின் பின்னணியில் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்..

கோரிக்கை
இதற்காக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "கிருஷ்ணகுமார் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்குநிறைய மிரட்டல்கள் வருகின்றன.. இப்போது நைட் நேரத்தில் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார்.. அவருக்கு பின்னணியில் பயங்கரவாதிகள் தொடர்பு இருக்கும் என்றே தெரிகிறது.. அதனால், விரிவான விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.. இதன்பேரில் போலீசாரும் பசல் உல் அக்பரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்... தன் கனவு கன்னியை பார்க்க ராத்திரி நேரத்தில் ஆசைவர, அக்பருக்கு இதெல்லாம் தேவையா?
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ்












Click it and Unblock the Notifications