கன்னிசாமிகளுக்கு கவலையில்லை.. பக்தர்களால் திணறும் சபரிமலை சன்னிதானம்! தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காரணமாக சபரிலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாள் என்பதால் கூட்டம் மிகக் கடுமையாக இருந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் வயது முதிர்ந்தோர், 50 வயது கடந்த பெண்கள், 10 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள், கானக பாதைகளில் வருவோருக்கு தனி வரிசையை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி விரதமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்யாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

மண்டல பூஜை
இதனால் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது. தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை தொடர்ந்து ஸ்பாட் புக்கிங் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கூட்ட நெரிசல் குறைந்து இருக்கும் நிலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு
தற்போதைய சூழலில் டிசம்பர் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களால் அந்நாள் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 20ஆம் தேதிக்குள் 25 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனி வரிசை
கூட்டத்தை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் வயது முதிர்ந்தோர், 50 வயது கடந்த பெண்கள், 10 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள், கானக பாதைகளில் வருவோருக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரும் குழந்தைகள் வயது முதிர்ந்தோருக்கு 18ம் படியேற உதவியதோடு, அவர்களுக்கு தனி வரிசையில் செல்ல வசதி செய்து கொடுத்து நெரிசலற்ற தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ஐந்தாயிரம் பக்தர்களை தரிசனம் செய்ய வைக்கும் க்ரவுட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் சீராக அமல்படுத்தப்பட்டது.
குழந்தைகள் வரிசை
முந்தைய ஆண்டுகளில், படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டிசம்பர் 15ம் தேதிக்குப் பின் பக்தர்களில் குழந்தைகள், முதியோருக்கு தனி வரிசை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சீசனில் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இந்த சிறப்பு ஏற்பாடுகள் தற்போதிருந்தே செய்யப்படுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications