கேரளாவில் நிலச்சரிவு.. மண்ணுக்குள் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்.. சடலமாக மீட்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிலர் சிக்கினர். இந்நிலையில் தற்போது வரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா தாலுக்காவுக்குட்பட்ட குடையாத்தூர் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியான. இதனையடுத்து தீயணைப்பு துறையினர், மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில், மூன்று பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த பகுதியிலிருந்த மற்றவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றபட்டுள்ளனர். அதேபோல கனமழை நீடித்து வரும் நிலையில், இப்பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தற்போது சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அதேபோல, கர்நாடகாவிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. கனமழை காரணமாக மாண்டியா மாவட்டத்தில் வெள்ளம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கார்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இம்மாவட்டத்தில் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மைசூரு-பெங்களூரு சாலையில் ராமநகரில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Kerala: Three bodies found after a landslide hit Kudayathoor village in Thodupuzha taluka of Idukki district earlier this morning. Search operation underway. pic.twitter.com/OSuii86v5c
— ANI (@ANI) August 29, 2022
இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. பெங்களூரு-மைசூரு பேருந்துகள் ஹரோஹள்ளி- கனகபுரா- ஹலகூர்- மளவள்ளி- மைசூரு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மைசூரு மற்றும் மாண்டியா மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மழை கடுமையாக பாதித்துள்ளது. கனமழை தொடரும் நிலையில், தாழ்வான மற்றும் நீர் நிலைகளில் ஒட்டியுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications