Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு மருத்துவமனையில் அசைந்த உருவம்.. விரல்களை பார்த்ததுமே விழுந்தடித்து ஓடிய ஊழியர்கள்.. அடக்கடவுளே

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், சோஷியல் மீடியாவிலும் மொத்த பேரின் கவனத்தையும் குவித்து கொண்டிருக்கிறது.. கூத்துப்பரம்பில் அப்படி என்ன நடந்தது?

வடக்கு கேரள மாவட்டத்தில் உள்ள, ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையில், ஒருவரது உடல் அசைந்துள்ளது.. அந்த நபரின் கை விரல்கள் அசைவதை கண்ட ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்து, மருத்துவர்களிடம் விஷயத்தை சொன்னார்கள்..

kerala government hospital mortuary

இதனால், மருத்துவர்கள் விரைந்து சென்று அந்த நபரை சோதித்தனர்.. அப்போதுதான் உயிரிழந்ததாக கருதப்பட்ட நபருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் யார் என்ற விசாரணையும் ஆரம்பமானது.

மருத்துவர்கள்: வடக்கு கேரள மாவட்டத்திலுள்ள கூத்துபரம்பில் உள்ள பச்சபொய்காவை சேர்ந்த பவித்ரன் என்பவரே அந்த நபர் என்பது உறுதியானது.. 67 வயதாகும் பவித்ரன், இதயம், நுரையீரல் உள்ளிட்ட கோளாறுகளால் கடந்த சில காலங்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே, கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, பவித்ரனை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்..

ஆனால், அங்கு மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருந்தபோது சிகிச்சைக்கு நிறைய செலவாகிவிட்டதாம். இதனால், அடுத்தடுத்த சிகிச்சையை எப்படி தருவதென தெரியாமல் குடும்பத்தினர் கையை பிசைந்துள்ளனர். அதனால், பவித்ரனை சொந்த ஊருக்கே அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

kerala government hospital mortuary

வென்டிலேட்டர்: ஆனால், வென்டிலேட்டர் இல்லாமல் இருந்தால் பவித்ரன் எப்படியும் 10 நிமிடங்களில் உயிரிழந்துவிடுவார் என்று மங்களூருவில் உள்ள டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனினும், குடும்பத்தினர் பவித்ரனை சொந்த ஊருக்கு அழைத்த செல்ல முடிவு செய்து, மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் அவரை ஏற்றியுள்ளனர்.. ஆனால், அந்த ஆம்புலன்ஸில் வெண்டிலேட்டர்களும் இல்லையாம்.. சாதாரண ஆம்புலன்ஸில் பவித்ரனை படுக்கவைத்து, பவித்ரனின் மனைவியும் சகோதரியும் அழைத்து வந்துள்ளனர்..

kerala government hospital mortuary

மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டதிலிருந்தே பவித்ரனின் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வந்ததாம்.. கண்களையும் அவர் திறக்கவில்லையம்..

ஆம்புலன்ஸ்: 5 மணி நேர பயணத்திற்கு பிறகு கேரளாவுக்கு பவித்ரனை கொண்டு வந்தனர்.. 10 நிமிடத்தில் அவர் இறந்துவிடுவார் என்று மங்களூர் டாக்டர்கள் சொன்னதாலும், ஆம்புலன்ஸில் வெண்டிலேட்டர் இல்லாததாலும், பவித்ரன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் நினைத்துக் கொண்டுள்ளனர்.. அதற்கு பிறகே ஏ.கே.ஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிணவறையில் அவரை வைத்துள்ளனர்..

ஒருநாள் இந்த பிணக்கிடங்கில் வைத்துவிட்டு, மறுநாள் பவித்ரனுக்கு இறுதிச்சடங்கு செய்யவும் முடிவு செய்திருந்தனர்.. அதற்கான ஏற்பாட்டில் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தபோதுதான, சவக்கிடங்கில் பவித்ரனின் விரல் அசைவை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.. உடனடியாக அவரை அடையாளம் கண்டு, பவித்ரன் என்று பெயர் சொல்லி டாக்டர்கள் அழைத்தபோது, கண்களைத் திறந்து பார்த்தாராம்..

நிம்மதி: இப்போது பவித்ரன் ஐசியுவில் இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.. அவரது உடல்நிலையும் நன்றாக இருக்கிறதாம். இதற்கு நடுவில், பவித்ரன் உயிரிழந்த தகவலை கேட்ட அவரது சொந்தக்காரர்கள், அஞ்சலி செலுத்துவதற்காக மாலைகளுடன் சென்றுவிட்டார்களாம். இப்போது பவித்ரன் நலமுடன் செய்தி கிடைத்துள்ளதால், அனைவரும் நிம்மமி பெருமூச்சு விட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+