Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழகிகளை ஃபாலோ செய்த ஹோட்டல் ஓனர்.. ஆடிகாரில் இருந்தவர் யார்?.. திடீர் திருப்பம்

கேரள முன்னாள் அழகியின் விபத்து தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாடல்கள் 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான வழக்கு சூடுபிடித்து வருகிறது.. பல்வேறு தகவல்களும் வெடித்து வருகின்றன.

2019ம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சி கபீர்... இதே அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் அஞ்சனா ஷாஜன்.. இவர்கள் 2 பேருமே நெருங்கிய தோழிகள் ஆவர்.
கடந்த நவம்பர் மாதம் 1ம்தேதி, நள்ளிரவு ஒரு மணிக்கு, அன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களின் நண்பர்கள் முஹம்மது ஆசிக் ஆகியோர் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.

நொறுங்கியது

நொறுங்கியது

அப்போது இவர்களின் கார் முன்பு, வேறு ஒரு கார் குறுக்கே வந்துள்ளது.. அந்த காரின்மீது மோதிவிடாமல் இருக்க, காரை திருப்பி உள்ளனர்.. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ரோட்டில் ஓடி, சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.. இதில் காருக்குள் இருந்த அன்சி கபீர், அஞ்சனா ஷாஜன் இருவருமே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. டிரைவர் அப்துல்ரஹ்மான் உட்பட 2 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு, எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர்.

விசாரணை

விசாரணை

ஆனால், தீவிர சிகிச்சையில் இருந்த முஹம்மது ஆஷிக் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். டிரைவர் அப்துல் ரஹ்மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் ஓரளவு உடல்நலம் தேறினார்.. பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் அப்துல் ரஹ்மான் போதையில் கார் ஓட்டியதும், கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 31-ம் தேதி இரவு டிஜே பார்ட்டியில் அனைவரும் கலந்து கொண்டுவிட்டு திரும்பி கொண்டிருந்ததாகவும் கூறினார்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

எனவே, போலீசாரும் அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதுவிருந்து நடந்த ஹாலில் பதிவான காட்சிகள் மட்டும் அழிக்கப்பட்டிருப்பதை கண்டனர்.. சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ஓனருடன் சேர்த்து 5 ஓட்டல் ஊழியர்களையும் பாலரிவட்டம் போலீசார் கைது செய்தனர்.. ஹோட்டல்ஓனர் ராய் ஜோசப்பிடம் விசாரணை நடந்தது.. அப்போதுதான், இன்னொரு தகவல் வெளியானது.. ஹோட்டலை விட்டு மாடல் அழகிகள் காரில் கிளம்பி செல்லும்போது, இவர்களின் பின்னாடியே மற்றொரு ஆடி கார் துரத்தி வந்துள்ளது.

 யார் அவர்கள்?

யார் அவர்கள்?

அகுந்தானூர் என்ற இடத்தில் இருந்து, ஆடிகார், அழகிகளின் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.. விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கியதுமே, அந்த ஆடி காரில் இருந்து, ஷைஜூ என்பவர் இறங்கி பார்த்துவிட்டு மறுபடியும் காரில் ஏறி சென்றுவிட்டாராம்.. இந்த விஷயத்தை போலீசார் மோப்பம் பிடித்துவிட்டதுமே, எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை நினைத்து, ஷைஜு முன்ஜாமீன் கேட்டுள்ளார்..

 முன்ஜாமீன்

முன்ஜாமீன்

இந்த ஷைஜூ யார் என்று தெரியவில்லை.. இவர்கள் ஏன் அழகிகளை துரத்தினார்கள் என்றும் தெரியவில்லை.. மாடல் அழகிகளின் காரின் குறுக்கே வந்த கார் யாருடையது? என்றும் தெரியவில்லை.. அதேபோல இந்த வழக்கில் இப்போது 2 வித தகவல்கள் வெளிவந்துள்ளது.. அழகிகள் 2 பேரும் ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் கூல்டிரிங்ஸ் குடித்துள்ளனர்.. அந்த கூல்டிரிங்ஸில் அவர்களுக்குகே தெரியாமல் அதிகம் போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அது தெரியாமல் கார் ஓட்டிச் சென்றதால்தான் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் கேரள போலீசுக்கு எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளதாம்..

ஆடிகார்

ஆடிகார்

அந்த எஸ்எம்எஸ்ஸை யார் அனுப்பியது என்கிற தகவல் இதுவரை தெரியவில்லை.. அதேசமயம், அழகிகளுக்கு, கட்டாயப்படுத்தி போதை மருந்து கொடுக்கப்பட்டதா என்பதையும் சிசிடிவி கேமிரா மூலம் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். அதேபோல, அழகிகளை ஆடி கார் வேகமாக பாலோ செய்தபோது, அந்த காரில் கைதான ஹோட்டல் ஓனர் ராய் இருந்தாராம்..

குழப்பம்

குழப்பம்

இவர் ஏன் அவர்களை நடுராத்திரி 1 மணிக்கு ஃபாலோ செய்தார்? அல்லது 2 கார்களுக்கும் இடையே ரேஸ் மாதிரியான போட்டி ஏதாவது அந்த நேரத்தில் நடந்ததா? என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது... அதுமட்டுமல்ல, ஹோட்டலில் பார்ட்டி நடந்தபோது, அழகிகளுக்கும், ஹோட்டல் ஓனருக்கும் வாக்குவாதம் ஏதோ ஏற்பட்டதாம்.. அதனால்தான் அழகிகளின் காரை அவர் ஃபாலோ செய்துள்ளார் என்றும், காரை விபத்துக்குள் சிக்க வைத்துள்ளதாகவும், மலையாள சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதன்காரணமாகவே, ஹோட்டலில் இருந்த சிசிடிவி ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. மேலும், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை ஏற்படுத்தும் வகையில், மேலிடத்து பிரஷர் அதிகமாகி இருக்கிறதாம்.. முக்கிய நபர் ஒருவருக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்... போதைமருந்து, ஆடிகார், சிசிடிவி, என்று அடுத்தடுத்த தகவல்கள் இந்த விபத்து தொடர்பாக வெளிவந்து கொண்டிருப்பது, கேரள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+