Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

70 வயது மூதாட்டியையும் விடாத முகமது ஷபி.. ஸ்ரீதேவி பெயரில் பேஸ்புக்கில் அக்கவுண்ட்.. பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஸ்ரீதேவி என்ற பெயரை கொண்ட அக்கவுண்டை உருவாக்கிய கேரளா நரபலி சம்பவத்தை நிகழ்த்திய மந்திரவாதி முகமது ஷபி பல பெண்களிடம் லீலைகளை அரங்கேற்றியுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் எலாந்தூர் கிராமத்தில் கடவந்தரா பகுதியை சேர்ந்தவர் ரோஸ்லின் (50). இவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரை போல் தமிழகத்தின் தருமபுரியை சேர்ந்தவர் பத்மா (52). இவரும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் இருவருமே கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காணாமல் போய்விட்டனர். இவர்கள் இருவரையும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் முகமது ஷபி என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.

முகமது ஷபி

முகமது ஷபி

இதையடுத்து போலீஸார் முகமது ஷபியை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின. அவர் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் பகவந்த் சிங் மற்றும் லைலா தம்பதியின் வீட்டுக்கு அழைத்து சென்று பத்மாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது.

நரபலி

நரபலி

இது போல் ரோஸ்லினும் நரபலி கொடுக்கப்பட்டதை முகமது ஷபி ஒப்புக் கொண்டார். பின்னர் பகவந்த் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் லைலாவுக்கு முகமது ஷபி அறிமுகமாகி இருவருக்குள்ளும் நெருக்கமான தொடர்பு உள்ளதாம். ஒரு கட்டத்தில் கணவரையே கொன்றுவிடவும் லைலா முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

குறுகிய காலத்தில் பணக்காரர்

குறுகிய காலத்தில் பணக்காரர்

இந்த நிலையில் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆக வேண்டும் என நினைத்த போது முகமது ஷபிதான் பகவந்த் சிங்கிடம் நரபலி கொடுத்தால் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆட்களை ஏற்பாடு செய்யுமாறு பகவந்த் சிங் கூறியதை அடுத்து முகமது ஷபி தனக்கு தெரிந்த ரோஸ்லின், பத்மா ஆகியோரை கடத்தி அவர்களது மார்பகங்களை அறுத்து , பிறப்புறுப்பில் பாட்டிலை நுழைத்து மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

துண்டு துண்டாக கூறு

துண்டு துண்டாக கூறு

இருவரது உடல்களையும் துண்டு துண்டாக கூறு போட்டு அதை குங்குமம் இட்ட கவரில் அடைத்துள்ளனர். சில துண்டுகளை சமைத்து சாப்பிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நரபலி கொடுப்பதற்கு முன்னர் பெண்களுக்கு நிர்வாண பூஜை நடத்தியதாகவும் தெரிகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது ஷபி பெண்களை எப்படியெல்லாம் சித்ரவதை செய்தார் என்பது குறித்து விளக்கியுள்ளாராம்.

70 வயது மூதாட்டி

70 வயது மூதாட்டி

70 வயது மூதாட்டியையும் பலாத்காரம் செய்து அவரது பிறப்புறுப்புகளை சிதைத்து கொடூரம் செய்ததும் ஏற்கெனவே இவர் மீது 8 க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. முகமது ஷபி ஸ்ரீதேவி என்ற பெயரில் இவர் பேஸ்புக் பக்கத்தில் அக்கவுண்ட்டை தொடங்கி பல ஹைக்கூ கவிதைகளை பதிவிட்டுள்ளார். மேலும் பூக்கள் கொண்ட படங்களையும் இவர் டிபியாக வைத்திருந்தாராம்.

பண கஷ்டம்

பண கஷ்டம்

இவர் பெண் என நினைத்து நிறைய பேர் இவரது கவிதைக்கு மயங்கி இவருடன் நட்பில் இருந்துள்ளனர். பின்னர் பண கஷ்டத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து மாந்த்ரீகம் மூலம் கஷ்டத்தை போக்குவதாக கூறி நிர்வாண பூஜை, நடத்தி பலாத்காரம் செய்து ஒரு கட்டத்தில் நரபலியும் கொடுத்துள்ளார். முகமது ஷபி எர்ணாகுளத்தில் ஒரு ஹோட்டல் நடத்தியுள்ளார். இந்த ஹோட்டல் அருகே மாணவிகள் விடுதியும் இருக்கிறது. இந்த விடுதி மாணவிகளையும் முகமது ஷபி பாலியல் சித்ரவதை செய்தது தெரியவந்தது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை கேரளா முழுவதும் 26 பெண்கள் மாயமாகி உள்ளார்கள். கைதான முகமது ஷபியை 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தும் போது இன்னும் பல மர்மங்கள் வரும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+