பேபி அணையில் மரங்கள்- கேரளா அடாவடித்தனம்-மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்ததால் அனுமதி திடீர் ரத்து!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை கேரளா அரசு திடீர் என ரத்து செய்துள்ளது. இத்தனைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்த பின்னரே இந்த அனுமதியை ரத்து செய்து அடாவடித்தனத்தை காட்டியுள்ளது கேரளா.
முல்லைப் பெரியாறு பேபி அணைப் பகுதியில் அணையைப் பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கேரளா பலமுறை நிராகரித்தது. ஆனால் திடீரென கேரளா அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

ஸ்டாலின் நன்றி கடிதம்
பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த தமிழகத்தின் இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது. மேலும் பேபி அணையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த மரம் வெட்டுவதற்கான அனுமதி உதவும் என கூறியிருந்தார். ஆனால் கேரளாவின் வனத்துறை அமைச்சர் சசீந்தரனோ, தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது குறித்து அதிகாரிகள் தமக்கு தெரிவிக்கவில்லை என்றார்.

கேரளா திடீர் மாற்றம்
அத்துடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்துக்குப் பின்னரே இப்படியான அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். அதிகாரிகள் தரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். கேரள அமைச்சர் சசீந்தரனின் இந்த பதிலால் குழப்பம் ஏற்பட்டது.

கேரளாவின் கொந்தளிப்புக்கு காரணம்
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் நிலைப்பாடு. தற்போது மரங்களை வெட்ட அனுமதித்தால் பேபி அணை பலப்படுத்தப்படும். அப்படி பேபி அணை பலப்படுத்தப்பட்டால் கேரளாவின் நிலைப்பாடு பொய் என்றாகிவிடும். இதனால் கேரள அமைச்சர் சசீந்தரன், தமிழகத்துக்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த விவகாரத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்.

மரங்களை வெட்டும் அனுமதி ரத்து
இதனிடையே பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்துக்கு தரப்பட்ட அனுமதியை கேரளா அரசு ரத்து செய்துள்ளது. மேலும் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அமைச்சர் சசீந்தரன் தெரிவித்துள்ளார். பேபி அணையை பலப்படுத்தினால் தமிழகமானது முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கிவைக்க உரிமை கோரும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய அடாவடி நடவடிக்கையை கேரளா எடுத்துள்ளது என்கின்றனர் மூத்த வனத்துறை அதிகாரிகள்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications