ஓணம் பண்டிகை.. “இது தப்பு” - ஹிஜாப் அணிந்த பெண்கள் நடனமாடுவதா? - முஸ்லிம் மதகுரு எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு முஸ்லிம் மதகுரு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
கேரளா மாநிலத்தின் புகழ்பெற்ற பண்டிகையாக ஓணம் இருந்து வருகிறது. ஒணம் பண்டிகையன்று மலையாள மக்களின் கொண்டாட்ட முறையே அனைவரையும் வியக்கவும் ரசிக்கவும் வைக்கும்.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கிய ஓணம் பண்டிகை செப்டம்பர் 8 தேதி வரை கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

10 நாள் கொண்டாட்டம்
10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை நாளில், புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பொருட்களை சமைத்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்கின்றனர் கேரள மக்கள். ஓணம் பண்டிகையன்று அத்தப்பூ கோலம் போடும் பெண்கள் கேரளாவின் பாரம்பரிய சேலையும் அணிந்து உற்சாகமாக வலம் வருவார்கள்.

ஹிஜாப் மாணவிகள்
கேரளா மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் வசிக்கும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள், ஓணம் பண்டிகையை முன்னிட்டு உற்சாகமாக நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

சசி தரூர் பகிர்ந்த வீடியோ
மலப்புரம் மாவட்டம் வண்டூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது பள்ளியில் பயிலும் மாணவிகள் இசையை ஒலிக்கவிட்டு நடனம் ஆடினார்கள். இதில் ஹிஜாப் அணிந்த மாணவிகளும் உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோவை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உள்ளிட்ட பலரும் பகிர்ந்திருந்தனர்.

இஸ்லாமிய மதகுரு எதிர்ப்பு
மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக ஓணம் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமிய மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இஸ்லாமிய மதகுரு கல்பே சிப்தைன் நூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "மாணவிகள் தங்கள் சுய விபரத்தின்படி நடனமாடி இருந்தால் அதில் பிரச்சனை இல்லை. இந்த நாட்டில் ஒவ்வொருவருக்கும் முடிவெடுக்கும் உரிமை இருக்கிறது.

நடனமாட தடை
பள்ளி நிர்வாகம் நடனமாட கட்டாயப்படுத்தி இருந்தால் அது சட்டவிரோதமானது. இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை எடுத்துக்கொண்டால் அதற்கு அதிக மரியாதை இருக்கிறது. மற்ற ஆண்களின் முன்பாக நடனமாடுவது ஷரீஅத் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு இருக்கிறது." என்று அவர் கூறி இருக்கிறார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications