Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛தண்ணீர் வெடிகுண்டு’’.. முல்லை பெரியாறு அணை பற்றி விஷமம் கக்கிய காங்கிரஸ்.. பினராயி விஜயன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து கேரளா - தமிழக எல்லையில் தமிழகத்துக்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணை குறித்த விஷம பிரசாரங்களை கேரளாவை சேர்ந்தவர்கள் கையில் எடுத்துள்ளனர். கேரளா வயநாடு பேரிடர் போன்று முல்லை பெரியாறு அணையால் பாதிப்பு ஏற்படும். இதனால் அணையை இடிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன. இந்நிலையில் தான் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

கேரளா - தமிழக எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை போக்க 1895ம் ஆண்டு அப்போதைய பொறியாளர் பென்னிகுக் கட்டினார்.

mullaperiyar pinarayi vijayan kerala

இந்த அணை என்பது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை தான் பராமரித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி மட்டுமே உச்சஅளவாக கொண்டு நீர் தேக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முல்லை பெரியாறு அணை பலமிலழந்து விட்டதாக கேரளா முன்வைக்கும் குற்றச்சாட்டு தான் காரணமாகும். தமிழக பொதுப்பணித்துறை, மத்திய அரசின் நீர்வளத்துறை இன்ஜினியர்கள், நிபுணர்கள் குழுக்கள் முல்லை பெரியாறு அணையை பலமுறை ஆய்வு செய்து அணை மிகவும் பலமாக உள்ளது என கூறிவிட்டனர்.

மேலும் உச்சநீதிமன்றமும், வல்லுநர்கள் குழுவும் கூட முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்தாலும் கூட கேரளாவை சேர்ந்த சில விஷமிகள் தொடர்ந்து சேட்டை செய்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணை குறித்து வதந்திகளை பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. சமீபத்தில் கேரளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் கனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 370 க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 100க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? என்றே தெரியவில்லை. இத்தகைய சூழலில் தான் மீண்டும் முல்லை பெரியாறு பற்றி சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றன.

அதாவது முல்லை பெரியாறு அணை வலுவிழந்துள்ளது. இதனால் இந்த அணையால் கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்படலாம். இதனால் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில் கனமழை பெய்தது. இடுக்கி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்தது. அப்போதும் முல்லை பெரியாறு பலமின்றி இருப்பதாக கூறி வதந்தி பரப்பப்பட்டது. அந்த சமயத்திலும் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் . அது பலமாக இல்லை என்று கேரளாவை சேர்ந்த பலரும் முதல்வர் ஸ்டாலினை முகநூல் பக்கத்தில் டேக் செய்து பதிவிட்டு வந்தனர்

அதேபோல் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி டீன் குரியகோஸ் லோக்சபாவில், ‛‛முல்லை பெரியாறு அணை என்பது தண்ணீர் குண்டு. இதனால் அந்த அணையை இடிக்க வேண்டும்'' என்றார். அதேபோல் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கு மத்திய மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, ‛‛முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுதான் வருகிறது. முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் எதுவுமே இல்லை'' என்றார். அதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க வலியுறுத்தி கேரளா மாநில காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்தார்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் எம்பி டீ்ன் குரியகோஸ் தெரிவித்தது பற்றியும், முல்லை பெரியாறு அணை குறித்தும் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: ‛‛முல்லை பெரியாறு அணை பற்றி தற்போது எந்த கவலையும் பட தேவையில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு தொடரும்'' என்றார். இதன்மூலம் முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதை பினராயி விஜயன் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாடு தொடரும் என அவர் கூறியிருப்பது என்பது முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+