ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி அடித்தும் பரிதவிப்பு.. ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழர்கள்
திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் ரூபாய் 25 கோடி பரிசுத்தொகை வென்ற தமிழர்கள் 4 பேரும் லாட்டரி டிக்கெட்டை கேரளாவில் தான் வாங்கினார்களா? இல்லை கள்ளச்சந்தையில் வாங்கினார்களா என்று விசாரிக்க குழு அமைத்திருந்த நிலையில், தற்போது தமிழர்கள் 4 பேருக்கும் அந்த பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. மாநில அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோக கிறிஸ்துமஸ் புத்தாண்டு, விஷு, ஓணம், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது.

இதில் ஓணம் பம்பர் லாட்டரிக்கு ரூ.25 கோடி பரிசுத்தொகை என்பதால் இந்த லாட்டரி சீட்டை வாங்க கேரள மக்கள் மட்டும் இன்றி வெளி மாநிலத்தவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். கேரளாவில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பலருக்கும் லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு விஷூ பம்பர் லாட்டரி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கிடைத்தது.
வெளி மாநிலத்தவர்களுக்கும் லாட்டரியில் கணிசமாக லாட்டரியில் பரிசுத்தொகை கிடைப்பதால் டிக்கெட் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும், கேரள அரசின் லாட்டரி விதியின் படி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் லாட்டரியை வாங்கலாம். ஆனால், கேரளாவுக்கு வந்து வாங்கியதை பரிசுத்தொகை விழும் போது ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இதானால், கொரியர் மூலமாகவோ வேறு யாரிடமாவது கொடுத்து லாட்டரியை வாங்கினால் பரிசுத்தொகை கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஓணம் பம்பர் லாட்டரியில் பரிசுத்தொகை அடித்த T230662 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த 4 பேர் வாங்கியது தெரியவந்தது. பாலக்காட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த உறவினரை பார்க்க சென்றுவிட்டு திரும்பும் வழியில் வாளையாறில் டிக்கெட் வாங்கியதாக பாண்டியராஜன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அப்படி வந்து சென்றது மற்றும் லாட்டரி வாங்கியதற்கான அத்தாட்சி எதுவும் அவர்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதுதான் தற்போது அவர்களுக்கு சிக்கலாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அன்புரோஸ் என்பவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கேரள லாட்டரி ஏஜென்சியால் கமிஷன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாகவும் இதனால் அவர்களுக்கு பரிசுத்தொகையை கொடுக்கக் கூடாது. லாட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை நற்காரியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேரள அரசு விசாரணையை தொடங்கியது. லாட்டரி துறையின் இயக்குனர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு பரிசுத்தொகை அடித்தவர்கள் கேரளாவிற்கு வந்த போதுதான் லாட்டரியை வாங்கினீர்களா? என்பதை உறுதி செய்த பிறகே பரிசுத்தொகையை அளிக்கும் என்றது. கேரள அரசு விதிகளின் படி, கேரள மாநில லாட்டரியை வெளி மாநிலங்களில் விற்பனை செய்ய முடியாது. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால் அவர்கள் கேரளாவிற்கு வந்ததற்கான காரணம் மற்றும் வந்ததற்கான சான்று ஆகியவை பரிசோதிக்கப்படும்.

புகார் எதுவும் அளிக்கப்படாவிட்டாலும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழுந்தால் மேற்கூறியவற்றை சரிபார்த்த பிறகே பரிசுத்தொகை உரியவரிடம் ஒப்படைக்கப்படும். இதில் முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கேரள லாட்டரித்துறை உடனடியாக வருமான வரித்துறைக்கு பரிசுத்தொகை கொடுக்கப்படாது என்ற தகவலை தெரிவிக்கும். எனவே, இந்த முறை பம்பர் பரிசுத்தொகை லாட்டரியில் பரிசுத்தொகை அடித்தவர்களுக்கே கிடைக்குமா அல்லது அரசுக்கே கிடைக்குமா என்று கேரளாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு ஓனம் லாட்டரி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பரிசுத்தொகை வென்ற 4 பேரும் லாட்டரி டிக்கெட்டை கேரளாவில் தான் வாங்கினார்களா? இல்லை கள்ளச்சந்தையில் வாங்கினார்களா என்று விசாரிக்க குழு அமைத்திருந்த நிலையில், தற்போது கேரள அரசு தமிழர்கள் 4 பேருக்கும் அந்த பரிசுத்தொகை வழங்கியுள்ளது. இதனால் பரிசு அடித்தும் பரிசுத்தொகை கிடைக்குமா என்று எதிர்பார்த்த தமிழர்கள் 4 பேரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications