பிறந்தமேனியாக ஜோதிடரை நிற்க வைத்து, பக்கத்தில் நின்ற பெண்.. தங்க நகைகள் வேற.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே தோஷத்தை நிவர்த்தி செய்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ஜோதிடரை வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார் பெண்.. அந்த வீட்டில் நடந்த சம்பவம்தான், இப்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2 பேர் கைதாகி உள்ளனர்.. மிச்சம் 7 பேரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன நடந்தது?
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ளது மஞ்சேரி என்ற பகுதி.. இங்குள்ள கிராமத்தை சேர்ந்தவர் 44 வயதான மைமூனா என்ற பெண்.. இவர் கடந்த சில வருடமாகவே கூடலூரில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு இளைஞரை அழைத்துக் கொண்டு, பாலக்காடு கொல்லங்கோட்டில் உள்ள ஒரு பிரபல ஜோதிடரின் வீட்டுக்கு மைமூனா சென்றிருக்கிறார்.

வீட்டில் கெட்ட சக்தி
அப்போது ஜோதிடரிடம், "கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, கொழிஞ்சாம்பாறையில் வசித்து வருவதாகவும், தன்னுடைய வீட்டில் சில பிரச்னைகள் இருப்பதால் தோஷத்தை நிவர்த்தி செய்ய வீட்டுக்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.. உடனே ஜோதிடரும், நிச்சயம் வீட்டுக்கு வருவதாக சொல்லி உள்ளார்.
அதன்படியே சம்பவத்தன்று கொழிஞ்சாம் பாறைக்கு ஜோதிடர் சென்றார்.. அவரை கல்லாண்டிச்சுள்ளாவில் உள்ள ஒரு வீட்டுக்கு 2 பேர் வரவேற்று அழைத்து சென்றார்கள்.. ஆனால், அது மைமூனாவின் வீடு கிடையாது..
ஏகப்பட்ட கொலை, வழிப்பறி கேஸ்களில் தொடர்புடைய பிரதீஷ் (36) என்ற ஒரு ரவுடியின் வீடாகும். இது தெரியாமல், அந்த பெண்ணின் வீடு என்று நினைத்து, ஜோதிடர் வீட்டுக்குள் சென்றார்.. ஜோதிடரை அந்த பெண் வரவேற்றார்.. பெண்ணுடன், மேலும் 9 பேர் அந்த வீட்டில் இருந்தனர்.
நிர்வாண கோலம்
அப்போது அங்கிருந்த பிரதீஷ், திடீரென ஜோதிடரை மிரட்டி, அந்த வீட்டிலிருந்த ஒரு ரூமுக்குள் சென்றார்.. அவர்களது பின்னாடியே மைமூனாவும் அந்த ரூமுக்குள் சென்றார்.. பிரதீஷூம், அந்த பெண்ணும் சேர்ந்து, ஜோதிடரை மிரட்டி அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த நிர்வாண கோலத்தில் ஜோதிடரை நிற்க வைத்து, அவருக்கு பக்கத்தில் மைமூனாவும் நெருக்கமாக நின்று கொண்டார். இப்போது, இருவரையும் பிரதீஷ் ஆபாச போட்டோக்களை எடுத்தார்..
அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும், உறவினர்களுக்கும் அனுப்ப போவதாக சொல்லி மிரட்டினார்.. ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டதுடன், ஜோதிடர் அணிந்திருந்த நாலரை பவுன் நகை, செல்போன், ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டனர்.. வீட்டிற்குள் வைத்து, ஜோதிடரை இப்படி இருவரும் மிரட்டி கொண்டேயிருந்தபோது, திடீரென போலீஸ் வந்துவிட்டது.
எகிறி குதித்து தப்பி ஓட்டம்
அதாவது, ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிரதீஷை தேடிக் கொண்டு தற்செயலாக வந்துள்ளனர்.. போலீஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே, அங்கிருந்த மொத்த பேரும் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. தன்னுடைய உடைகளை எடுத்துக் கொண்டு ஜோதிடரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். போலீசார் விரட்டி சென்றும், யாரையும் பிடிக்க முடியவில்லை. இதனால் சிற்றூர் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டதால், அந்த வீட்டில் அதுவரை என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரியாது.
இதனிடையே போலீசாரை பார்த்ததுமே தப்பி ஓடிய மைமூனா நடுவழியிலேயே கீழே தடுமாறி விழுந்துவிட்டார்.. அவரை அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றனர். அப்போதுதான், அந்த பெண் போதையில் இருப்பது தெரியவந்தது. என்ன நடந்தது என்று மைமூனாவிடம் கேட்டதற்கு, பொதுமக்களை போதையிலேயே திட்டியிருக்கிறார்..
கைது - வழக்கு பதிவு
இதற்கு பிறகு, அந்த பகுதியினர் கொழிஞ்சாம்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில்தான், ஜோதிடரை வரழைத்தது, நிர்வாணமாக்கியது, நகை, பணம் பறித்தது என எல்லாமே தெரியவந்தது. இதையடுத்து, மைமூனாவை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
இதற்கு பிறகு அதே கொழிஞ்சாம்பாறை போலீசில் ஜோதிடர் புகார் செய்தார். இந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.. ஜோதிடரை மிரட்டிய ஸ்ரீஜேஷ் (26) என்ற இளைஞர் மட்டும் தற்போது கைதாகியிருக்கிறார்.. முக்கிய குற்றவாளி பிரதீஷ் உள்பட 7 பேரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications