Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபைன் போட்டுருவாங்க.. சபரிமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளே அலர்ட்! கேரள போலீஸ் வெளியிட்ட வார்னிங்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வாகனங்களில் வருகை தரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை அலங்காரம் செய்து கொண்டு வரக்கூடாது என்றும், அதனை மீறி அலங்காரத்தோடு வரும் வாகனங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கேரள மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற வாகனங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்கிறார்கள். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

sabarimala ayyappa temple kerala

அதிலும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து செல்கிறார்கள். சபரிமலை அமைந்துள்ள பகுதி மலைப்பகுதி என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வேன்கள் மற்றும் கார்களில் வருகை தருகிறார்கள்.

அப்படி வேன்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களில் ஐயப்பன் பாடல்களை ஒலிக்கவிட்டபடியும், வேன்களில் தோரணமாக வாழை இலை, மா இலைகளை கட்டிக்கொண்டும் வருகிறார்கள். இந்த நிலையில் இப்படி வேன்களை அலங்கார வாகனமாக, உருவ மாற்றம் செய்து அலங்கரித்து வரக்கூடாது என்றும், இதனை மீறி வரும் வாகனங்கள் வழி மறித்து நிறுத்தப்படும் அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கேரளா மோட்டார் வாகன போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வேன்கள், பஸ்களில் தான் வருகிறார்கள். அப்படி வேன்களில் வரும் பக்தர்கள், அந்த வாகனங்களை அலங்கரித்து வருகிறார்கள். கோவில் வடிவில் வடிவமைத்தும், வாழை பக்க குலைகள், மா இலைகள், தென்னங்குலைகளை கட்டி தொங்கவிட்டு அலங்கரித்தபடியும் வாகனங்களை மாற்றி அதில் வருகிறார்கள். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வாகனங்கள் வருவதால் வளைவும், நெளிவும் கொண்ட பாதையில் எதிர் வரும் வாகன ஓட்டுனர்களின் கவனம் இதனால் சிதறக்கூடும்.

இப்படி அலங்கரித்து வரும் வாகனங்கள் எதிர் வரும் வாகன ஓட்டியின் கவனத்தை சிதறச்செய்யும். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கேரள போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கூறி வந்தனர். இதேபோல் மலைப்பகுதிகளில் வாகனங்கள் வரும் போது, உள்ளே ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டுகளை ஒலிக்க விட்டு வருவதால் அது வன விலங்குகளை பாதிக்கிறது.

இதன் காரணமாகவே யாரும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட கூடாது என்று கேரள மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தல் வழங்கியும் இது போன்று சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் தான் இன்று இப்படி வாகனங்களை அலங்காரம் செய்து வந்த வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேபோல் சில வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பக்தர்கள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளமர். மேலும், மற்ற பக்தர்களும் வாகனங்களை உருவ மாற்றம் செய்து அலங்காரத்தோடு கொண்டு வரக்கூடாது என்பதற்காக சபரிமலை பகுதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+