சாதாரண கிணறு பெட்ரோல் கிணறா மாறி போச்சே.. "எப்புட்றா.." வியப்பில் கேரள மக்கள்! குழம்பும் அதிகாரிகள்
திருவனந்தபுரம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் புலம்பி வரும் நிலையில், இங்கே ஒருசிலரின் வீடுகளில் உள்ள கிணற்றில் திடீரென பெட்ரோல் வந்த அதிசயம் நடந்துள்ளது.
இந்தியா தனது பெட்ரோல் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதியைச் செய்கிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் சிறு உயர்வு கூட இங்கு பெட்ரோல் விலை உயரக் காரணமாக இருக்கும்.

கடந்த பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்ற போதிலும், இப்போதும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் புலம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்ன நடந்தது: இந்தச் சூழலில் பெட்ரோல் திடீரென கிணற்றில் வந்தால் எப்படி இருக்கும். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் வெஞ்சரமூடு என்ற பகுதியில் கே.சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இவரது வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோல் வந்துள்ளது. இதை அவர்களால் நம்பவே முடியவில்லையாம். இது குறித்து தகவல்கள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சுகுமாரனின் வீட்டு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களாகவே வித்தியாசமான சுவையுடன் இருந்துள்ளது. இது எதனால் என அவர்களுக்குப் புரியவில்லை. ஒரு கட்டத்தில் வாசம் மிகவும் மோசமாக வரத் தொடங்கிய நிலையில், அவர்கள் கிணற்றில் இருந்து எடுக்கும் நீரை விட்டு விட்டு குழாய் நீரைக் குடிப்பதற்கும் மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கலர் மாறிய தண்ணீர்: இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அந்த கிணற்றில் இருந்து பெட்ரோல் வாசனை வர ஆரம்பித்துள்ளது. திடீரென தண்ணீரின் நிறமும் மாறியுள்ளது. நீர் அப்படியே பிரவுன் கலரில் பெட்ரோல் நிறத்தில் மாறியுள்ளது. அவரது வீட்டில் மட்டுமின்றி அண்டை வீடுகளில் உள்ள கிணறுகளிலும் அதேபோல நீரின் நிறம் மாறி பெட்ரோல் வாடை அதிகமாக வந்துள்ளது. திடீரென இப்படி பெட்ரோல் வாடை வரவும் கிணற்றில் இருக்கும் நீரின் நிறம் ஏன் பிரவுன் கலரில் மாறியது எனத் தெரியவில்லை.

இவர்களின் வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் பெட்ரோல் பம்ப் ஒன்று இருக்கிறது. கிணற்றில் உள்ள தண்ணீர் பெட்ரோல் வாசனையுடன் வந்த நிலையில், இது தொடர்பாக அந்த பெட்ரோல் பம்ப் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் வந்து கிணற்றை மூடி, வீடுகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்தனர். அதேநேரம் பம்ப்பில் கீழே இருக்கும் தொட்டியில் கசிவு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர்.
கசிவு இல்லை: பம்ப்பில் உள்ள தொட்டியில் கசிவு எதுவும் இல்லை என்று இந்த ஆய்வுக்குப் பிறகு பம்ப் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனென்றால் பம்ப்பில் இருக்கும் பெட்ரோல் அளவு எதுவும் குறையவில்லையாம். வழக்கமான அளவிலேயே அங்கு அங்கு பம்ப்பில் பெட்ரோல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கிணற்றில் எப்படி பெட்ரோல் வாடை வந்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
-
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications