கண்களை குளமாக்கும் கேரளா.. நிலச்சரிவுக்கு முந்தைய - பிந்தைய போட்டோக்களை பாருங்க.. கலங்கிய வயநாடு
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவில் சிக்கியதாக கூறப்படும் நிலையில் 97 பேர் வரை பலியாகி உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வரும் சூழலில் நிலச்சரிவுக்கு முந்தைய, பிந்தைய டோட்டோக்கள் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
‛கடவுளின் தேசம்’ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் கேரளா நம் அண்டை மாநிலமாக உள்ளது. இயற்கை எழில் மிகுந்து காணப்படும் கேரளாவில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா சென்று வருகின்றனர்.

அந்த வகையில் கேரளாவின் வயநாடு என்பது மிகவும் பிரபலமான இடமாகும். இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்க பலரும் வயநாடு சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று வயநாடு மாவட்டம் பேரிடரை சந்தித்துள்ளது. கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளா வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு- 150 பேர் படுகாயம்- 700 பேரின் கதி என்ன?
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த பகுதிகள் மலை பாங்கான பகுதியாகும். டீ எஸ்டேட்கள் உள்ள இந்த இடங்களில் பொதுமக்கள் தங்கி பணியாற்றி வந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது,
இதனால் மண்கள் சரிந்து வீடுகள் மீது விழுந்த நிலையில் காட்டாற்று வெள்ளமும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சீறிப்பாய்ந்தது. இந்த நிலச்சரிவில் 1000க்கும் அதிகமானவர்கள் சிக்கி உள்ளனர். அதாவது சுமார் 500 வீடுகளில் வசித்து வந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதையடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். மீட்பு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கோர முகத்தை காட்டிய நிலச்சரிவு..வயநாட்டில் மரண ஓலம்! சோகத்தில் மூழ்கியுள்ளேன்.. விஜய் சொன்ன வார்த்தை
தற்போது பாலங்கள் அடித்து செல்லப்பட்டு இருப்பது, கனமழையால் வெள்ளம் பாய்ந்தோடுவது, சூழலில் மீட்பு பணி பெரிதும் சவாலாக உள்ளது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. இதில் 24 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி கடும் சிரமத்துக்கு இடையே நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் நிலச்சரிவு தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.

நிலச்சரிவின் சகதியில் ஒருவர் சிக்கியபடி காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பிய வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்த நிலையில் தற்போது நிலச்சரிவிற்கு முன் எடுக்கப்பட்ட படங்களும், நிலச்சரிவிற்கு பின்னர் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடும் வகையிலான போட்டோக்கள் வெளியாகி உள்ளன. அதில் பச்சை பசேலென காட்சியளிக்கும் மலைக்கு முன்பு இருபுறமும் தேயிலை செடிகள் வளர்ந்து இருக்க நடுவே சாலை செல்கிறது. இந்த இடத்தை பார்க்கும்போது நம்மை கவரும் வகையில் உள்ளது. ஆனால் தற்போது இந்த பகுதியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இது அனைவருக்கும் வேதனையை தருகிறது.
அதேபோல் சோரல்மாலா பள்ளி தற்போது நிலத்தில் மொத்தமாக அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த பள்ளி என்பது பசுமையான மரங்களுக்கு நடுவே மலையின் முன்புறமாக காட்சியளிக்கிறது. ஆனால் தற்போது இந்த பள்ளி கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன. பள்ளி கட்டடத்தை சுற்றி மழை வெள்ளம் ஓடுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி நிலச்சரிவின் கோரத்தாண்டவத்தை கண்முன் நிறுத்துகிறது.












Click it and Unblock the Notifications