"பாரத் மாதா கி ஜெய்.." முஸ்லீம் உருவாக்கியது என்பதால் ஆர்எஸ்எஸ் கைவிடுமா? பினராயி விஜயன் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பினராயி விஜயன், இஸ்லாமியர்கள் உருவாக்கி கோஷம் என்பதற்காக பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஹிந்த் முழக்கங்களைச் சங் பரிவார்கள் பயன்படுத்தாமல் இருப்பார்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் பிறகு சுமார் 5 ஆண்டுள் கழித்து இப்போது அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது.

Pinarayi Vijayan questions will RSS Abandon Bharat Mata Ki Jai As a Muslim Came Up With Slogan

இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக நாடு முழுக்க கூட்டங்களும் நடந்து வருகிறது.

பினராயி விஜயன்: இதற்கிடையே மலப்புரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், நேரடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கி சில கேள்விகளை எழுப்பினார். 'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'ஜெய் ஹிந்த்' போன்ற முக்கிய முழக்கங்களை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள் என்பது சங் பரிவாரங்களுக்குத் தெரியுமா என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய நிலையில், அச்சட்டத்திற்கு எதிராகக் கேரள மாநிலம் மலப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பிரனாயி விஜயன், "ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளிடம் நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். முஸ்லீம்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படும் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சார வரலாற்றையே அழிக்க முயல்வதாகும்.

இஸ்லாமியர்கள்: 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தை உருவாக்கியவர் அசிமுல்லா கான் என்ற இஸ்லாமியர். இங்கு வந்த சில சங் பரிவார் தலைவர்கள் தங்கள் எல்லோரையும் பார்த்து 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிடச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இந்த கோஷத்தை உருவாக்கியவர் யார் என தெரியாமல் போய்விட்டது. இந்த கோஷத்தை உருவாக்கியவரின் பெயர் அஜிமுல்லா கான்.. இது சங் பரிவாரங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த கோஷத்தை உருவாக்கியது ஒரு முஸ்லீம் என்பதால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பதும் எனக்குத் தெரியாது. இதேபோல 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை உருவாக்கியவர் நாட்டின் முன்னாள் தூதர் அபித் ஹசன் சஃப்ரானி. இது மட்டுமா.. தேச பக்தி பாடலான 'சாரே ஜஹான் சே அச்சா' என்ற பாடலையும் முகம்மது இக்கல் என்பவர் தான் இசையமைத்தார்.

இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்: முஸ்லிம்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் அல்லது இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று முழக்கமிடும் சங்பரிவார் அமைப்புகள் முதலில் இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டை ஆண்ட முஸ்லீம் மன்னர்கள், முஸ்லீம் ஆய்வாளர்கள் மற்றும் முஸ்லீம் அதிகாரிகள் நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஒளிரச் செய்வதில் பெரும் பங்கு வகித்துள்ளனர். நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெறுவதில் மற்ற பிரிவினருடன் முஸ்லிம்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+