பிரம்மாண்டத்தின் உச்சம்! திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த மோடி! இனி சர்வதேச வர்த்தகமே மாறும்
திருவனந்தபுரம்: கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்து வைத்தார். நாட்டின் முதல் டீப் வாட்டர் டிரான்ஷிப்மென்ட் துறைமுகமான இது கடல் வர்த்தகத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும். இதுவரை பெரிய சர்வதேச கப்பல்கள் இந்தியாவில் நிறுத்த துறைமுகம் இல்லாமல் இருந்த நிலையில், அந்த நிலையை விழிஞ்சம் துறைமுகம் மாற்றும்.
தொழிற்துறையை டெலவப் செய்யக் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

விழிஞ்சம் துறைமுகம்
பிபிபி எனப்படும் அரசு- தனியார் பங்களிப்பில் இணைந்து இந்தத் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.8,867 கோடி செலவில் அதானி நிறுவனம் இந்தத் துறைமுகத்தைக் கட்டியுள்ளது. தேவையான சோதனைகள் எல்லாம் செய்து கடந்த டிசம்பர் மாதம் துறைமுகத்திற்கு வர்த்தகச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், இதைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் பங்கேற்றனர்.
ஏன் முக்கியம்
அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகானாமிக் ஜோன் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இணைந்து கட்டப்பட்ட இந்தத் துறைமுகம் தான் நாட்டின் முதல் டீப் வாட்டர் டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாகும். அதாவது சர்வதேச ரூட்களில் இயங்கும் பெரிய கப்பல்கள் இதுவரை கொழும்புக்குச் செல்லும். அங்கிருந்து அது சிறிய கண்டெய்னர் கப்பல்களில் மாற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படும் சூழலே இருந்தது. இந்த விழிஞ்சம் துறைமுகம் அதுபோல பெரிய கப்பல்களைக் கூட எளிதாகக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரிய துறைமுகங்களைக் கூட ஈஸியாக கையாள முடியும் என்பதால் இந்தத் துறைமுகத்திற்கு வருவாய் அதிகரிக்கும். மேலும், முன்பு இந்தியா வந்த கப்பல்களும் கூட கொழும்பு சென்று அங்கிருந்தே சிறிய கப்பல்கள் மூலம் வர வேண்டும் என்பதால் செலவுகள் அதிகரித்தன. இப்போது அவை கேரளாவிலேயே கையாளப்படும் என்பதால் செலவும் கூட கணிசமாகக் குறையும்
பிபிபி முறை
விழிஞ்சம் துறைமுகத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், நிதி மட்டுமின்றி இந்தத் துறைமுகத்தைக் கையாள்வது கூட பிபிபி முறையில் மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ₹8,867 கோடியாகும். அதானி குழுமம் இந்தத் துறைமுகத்தைக் கட்டியுள்ளது.
சர்வதேச ரூட்டிற்கு மிக அருகில்
இந்தத் துறைமுகம் அமைந்துள்ள இடம் தான் ரொம்பவே முக்கியமானது.. சர்வதேச கப்பல் பாதைக்கு மிக அருகே 10 நாடிக்கல் மைல் தொலைவில் இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. இதன் ஆழம் 20 மீட்டருக்கு மேல் இருப்பதால் மிகப் பெரிய கண்டெய்னர் கப்பல்களையும் எளிதாகக் கையாள முடியும். இதுபோல 20+ மீட்டர் ஆழம் தேவைப்பட்ட கப்பல்கள் இத்தனை காலம் கொழும்பு, துபாய் மற்றும் சிங்கப்பூரில் நிறுத்தப்பட்ட நிலையில், அவை இனி இங்கு நிறுத்தப்படலாம் என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் துறைமுகம் இப்போது தான் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுகிறது என்றாலும் கடந்த சில மாதங்களாகவே இதில் சோதனை முறையில் கப்பல்கள் நிறுத்தப்பட்டு வந்தன. சில மாதங்களில் 250+ கண்டெய்னர் ஷிப் நிறுத்தப்பட்ட போதிலும் எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications