இரவு நேர விருந்தில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக 60 பேர் கைது.. டிவி நடிகைக்கும் தொடர்பு?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வாகமனில் இரவு விருந்து என்ற பெயரில் போதைப் பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக இளம்பெண் உள்பட 60 பேரை கேரளா போலீஸார் கைது செய்தனர்.
இந்த விருந்தில் சின்னத்திரை டிவி நடிகை ஒருவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. வாகமனில் ஒரு வட்டாபாதல் என்ற இடத்தில் ஒரு ரிசார்ட் உள்ளது. இங்கு போதை பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது இரவு நேர விருந்து என்ற பெயரில் போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என விருந்து களைகட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் தோடுபுசாவைச் சேர்ந்த அஜ்மல் (30), மலப்புரத்தைச் சேர்ந்த மெஹர் ஷெரின் (26), எடப்பலைச் சேர்ந்த நபில் (36), சல்மான் (38), அஜய் (41), கோழிக்கோட்டைச் சேர்ந்த சவுகத் (36), காசர்கோட்டைச் சேர்ந்த முகமது ரஷீத் (31), சாவக்காட்டைச் சேர்ந்த நிஷாத். (36) மற்றும் திரிபுனிதுராவில் வசிக்கும் பிராஸ்டி விஸ்வாஸ் (23) ஆகியோர் முக்கியமானவர்களாவர்.
இந்த நிகழ்ச்சியில் டிவி நடிகை ஒருவரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை.
-
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications