கடவுளின் தேசத்தில் பரபர! தேயிலை காட்டில் சீரழிக்கப்பட்ட சிறுமி! மதுபோதையில் மிருகங்களான சேட்டன்கள்!
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் இடுக்கி அருகே தேயிலைத் தோட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது கேரள மாநிலத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் பூப்பாறையைச் சேர்ந்த சைமன் என்கிற சாமுவேல் , அரவிந்த் மற்றும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து போலீசாரிடம் அதிர்ச்சி தரும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று மாலை 4.30 மணியளவில் ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரியும் சிறுமி அவரது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.

கேரளாவில் அதிர்ச்சி
இதனிடையே சம்பவம் நடப்பதற்கு முன்னர் சைமனின் நண்பர் அப்பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடையில் இருந்து மதுவைக் கொண்டு, அதனை குடிப்பதற்காக ஒரு ஆட்டோவை பிடித்து ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்தும் போது, சிறுமியிடம் அவரது ஆண் நன்பர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். சிறிது நேரத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் அங்கு சென்றுள்ளனர்.

சிறுமி பலாத்காரம்
சிறுமியின் நண்பரை கொடூரமாகத் தாக்கி அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் அவர்கள் சிறுமியை சுமார் 6 மணி நேரமாக மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் விரைந்து வந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பின்னர் இதுகுறித்து சந்தானபாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை
சிறுமி அளித்த புகாரின் பேரில் திங்கள்கிழமை காலை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. போலீசார் மருத்துவ பரிசோதனை செய்து, சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ் சிறுமியின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக இடுக்கி எஸ்பி ஆர் கருப்பசாமி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவான நபர்களை பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. அவர்களின் கைது விரைவில் பதிவு செய்யப்படும் என்றார்.

இருவர் தலைமறைவு
குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேர் தமிழகத்திற்குச் சென்றுவிட்டதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேலும் இருவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டதாகவும், அந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு உள்ளூர்வாசிகள் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
-
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications