குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை ஜாமீனில் விடுவித்த போலீஸ்.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ, சனிக்கிழமை எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் நடைமுறைகளை முடித்த பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மாலை 5.30 மணியளவில் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். போலீசாரே அவரை நேரடியாக ஜாமீனில் விடுவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் வழக்கில் குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ (41 வயது) இன்று காலை எர்ணாகுளம் ஹோட்டலில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீசார், எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, மாலை 5.30 மணியளவில் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். பிரபல மலையாள செய்தி ஊடகம் வெளியிட்ட தகவலின் படி, ஷைன் டாம் சாக்கோவிற்கு காவல் நிலையத்திலிருந்து நேரடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. ஏப்ரல் 21 அல்லது 22 ஆம் தேதிகளில் விசாரணைக் குழு முன் ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக ஓட்டலில் கைதான போது, போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதிப்படுத்த, அவரது இரத்தம், நகம் மற்றும் முடி உள்ளிட்ட மாதிரிகளை அறிவியல் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியிருக்கிறார்கள். இந்த மாதிரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும், முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதால், மருத்துவ பரிசோதனை உட்பட மேலும் நடைமுறைகளுக்காக நடிகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. நடைமுறைகளுக்குப் பிறகு, அவர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்றும் எர்ணாகுளம் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு பதிலளிக்க ஷைன் மறுத்துவிட்டார்.
என்ன நடந்தது?
இன்று காலை குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவிடம் ஹோட்டலில் நடந்த போதைப்பொருள் சோதனை தொடர்பாக கொச்சி நகர போலீசார் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னரே வழக்குப் பதிவு செய்தனர். போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள் (NDPS) சட்டத்தின் 27b, 29 பிரிவுகளின் கீழ் ஷைன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவுடன் கோழிக்கோட்டைச் சேர்ந்த அகமது முர்ஷத் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த அகமது முர்ஷத் மீது, ஆதாரங்களை அழித்ததற்காகவும், ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை பாதுகாக்க தவறான தகவல்களை வழங்கியதற்காகவும் அவர் மீது பிஎன்எஸ் பிரிவு 238 இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எர்ணாகுளம் டவுன் வடக்கு போலீசார் இன்று நடத்திய விசாரணையின் போது, போதைப்பொருளைப் பயன்படுத்தியதாக ஷைன் ஒப்புக்கொண்டார். போலீசார் ஹோட்டலுக்கு வந்தபோது, யாரோ தன்னைத் தாக்க முயற்சிப்பார்கள் என்று பயந்து அறையை விட்டு வெளியேறியதாக ஷைன் டாம் சாக்கோ போலீசாரிடம் கூறினாராம். எனினும் அவசரமாக ஹோட்டலை விட்டு வெளியேறியது குறித்து ஷைன் அளித்த வாக்குமூலம் உண்மையா என்று நிச்சயம் விசாரிப்போம் என்றும் போலீசார் கூறினார்கள்.
முன்னதாக 2015 ஆம் ஆண்டு கடவந்தரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்கில் அண்மையில் தான் ஷைன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இப்போது புதிய வழக்கில் சிக்கியிருக்கிறார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications