Sabarimala: கேரளா சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு.. சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்தார்!
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாகக் கேரளா சென்றுள்ளார். அவர் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற நிலையில், இன்று அவர் சபரிமலையில் தரிசனம் செய்தார். இருமுடி கட்டி ஜனாதிபதி முர்மு, சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சபரிமலை உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சபரிமலைக்குத் தரிசனம் செய்ய வருகிறார்கள். இதற்கிடையே இன்றைய தினம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்குத் தரிசனம் செய்யவுள்ளார். குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் சபரிமலைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

திரௌபதி முர்மு
இதற்காக நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மாலையில் கேரளா சென்றார். அங்கு அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்திலேயே வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக கவர்னர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
சபரிமலை
அதைத் தொடர்ந்து முர்மு இன்று காலை சபரிமலை கோயிலில் ஐய்யபனை தரிசனம் செய்தார். இதற்காகக் காலை 9:35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்ற குடியரசுத் தலைவர் முர்மு, காலை 10:20 மணிக்கு நிலக்கல் ஹெலிபேடை அடைந்தார். அங்கிருந்து சபரிமலை சன்னிதானத்திற்குச் சிறப்பு வாகனத்தில் சாலை மார்க்கமாகச் சென்றார்.
இந்தச் சூழலில் தான் அவர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.. இருமுடி கட்டி சபரிமலை கோயிலில் 18ம் படி ஏறி, ஐயப்பனை தரிசனம் செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு ஐயப்பன் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி முர்முவுடன் அவரது மெய்க்காவலர்களும் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசித்தனர். தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர், இன்றிரவே திருவனந்தபுரம் திரும்புகிறார். அங்குத் தனியார் ஹோட்டலில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நடத்தும் இரவு விருந்தில் பங்கேற்பார்.
வரும் நாட்கள்
நாளை அக்டோபர் 23ம் தேதி காலை 10:30 மணிக்கு ராஜ்பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிலையைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். பின்னர், நண்பகல் 12:50 மணிக்கு சிவகிரியில் ஸ்ரீ நாராயண குருவின் மகாசமாதி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, பாலா செயின்ட் தாமஸ் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்று, குமரகோமில் இரவு தங்குகிறார். அக்டோபர் 24ம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசாஸ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் கொள்ளும் அவர், பிறகு டெல்லி திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, இன்று சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்றும் இன்றும் பக்தர்கள் இரவு தங்க அனுமதி இல்லை.. குடியரசுத் தலைவர் நிலக்கல்லில் இருந்து புறப்பட்ட பிறகு, பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இன்று மாலை மட்டுமே பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். துலாம் மாதப் பூஜைகள் நிறைவடைவதையொட்டி, இன்றிரவு 10 மணிக்குக் கோயில் நடை சாத்தப்படும்.
குடியரசுத் தலைவர் சன்னிதானத்தில் தரிசனம் செய்யும் போது, பதினெட்டாம் படிக்கு அருகிலுள்ள மேல் கோயில் முற்றத்தில் உதவியாளர்கள், தேவஸ்தனம் போர்ட் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் முர்மு இன்று நண்பகல் 12:20 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை சபரிமலையில் தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications