"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்குப் போட்டி என்னவோ இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தான். ஆனால், அங்குச் சத்தமில்லாமல் பாஜக ஒரு சம்பவம் செய்து வருகிறது. பாஜகவுக்காக அங்கு இறங்கியுள்ள ஆர்எஸ்எஸ் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இது தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தவரை அங்கு இடதுசாரிகள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் மிக முக்கியமான போட்டியாக இருக்கிறது. அதேநேரம் பாஜகவும் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறார்கள்.

கேரளா
இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வர வாய்பில்லை என்றாலும் குறைந்தது ஒரு தொகுதியிலாவது வென்று, கேரளாவில் அகவுண்டை ஓபன் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருக்கிறது. கடந்த 2024 கேரளா லோக்சபா தேர்தலில் திரிசூரில் பாஜக சார்பில் போட்டியிட்டு நடிகர் சுரேஷ் கோபி வென்றிருந்தார். அதேபோல இந்த முறையும் ஒரு தொகுதியிலாவது வெல்ல வேண்டும் என்பதே பாஜகவின் டார்கெட்டாக இருக்கிறது.
இதற்காகவே பாஜகவுக்காக ஆர்எஸ்எஸ் இறங்கி வேலை பார்த்து வருகிறது. குறிப்பாக நேமம் தொகுதியைத் திருப்புமுனையாகக் கருதுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. ஆர்எஸ்எஸின் இந்த அணுகுமுறை அதன் நெட்வோர்க்கையும் திட்டமிடலையும் காட்டுகிறது.
ஆர்எஸ்எஸ்
ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டு விழாவை மார்ச் 15ம் தேதி நேமம், கைமனத்தில் அமிர்தா வித்தியாலயம் மைதானத்தில் இந்து ஒற்றுமை மாநாடாக நடத்தியது. ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த நிகழ்வு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. தொகுதியில் உள்ள இந்துக்களைத் திரட்டுவதையே நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இந்துக்களை நேரடியாகச் சென்று அழைத்து இந்த கூட்டத்திற்கு திரட்டினர். அப்பகுதியில் செல்வாக்கு மிக்க குடும்பங்களே மாநாட்டின் முக்கியப் பங்கேற்பாளர்களாக இருந்தன. இந்த மாநாடு திருப்திகரமாக இருந்ததாகவே அதில் பங்கேற்ற பலரும் தெரிவித்தனர்.
கோவில் அறங்காவலர்கள், சமூகத் தலைவர்கள் என பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர். வெளிப்படையாக பாஜக முத்திரை எதுவும் இல்லை என்றாலும், இதன் நோக்கம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருந்தது. இது வெறும் தொடக்கம் தான், இதைத் தாண்டியும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது தொடங்கி ஆர்எஸ்எஸ் தனது வழக்கமான பிரச்சாரத்தை உத்வேகத்தோடு மேற்கொள்கிறது. இந்த மெளனப் பிரச்சாரம், இளைஞர் மற்றும் நடுநிலை வாக்காளர்களைச் சென்றடைய பாஜகவுக்கு உதவுகிறது.
அடுத்து என்ன
அதாவது இந்த மார்ச் 15ம் தேதி நிகழ்வின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அப்படியே தேர்தலை வரை தக்கவைக்க பாஜக விரும்புகிறது. கேரள மாநில பாஜக தலைவராக இருக்கும் ராஜீவ் சந்திரசேகர், நேமம் தொகுதியில் போட்டியிடும் சூழலில், மாநாட்டின் எழுச்சியை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ்- பாஜக உறுதியாக இருக்கிறது. கேரளாவில் நேமத்தை பாஜக ஒரு திருப்புமுனை தொகுதியாகக் கருதுகிறது.
மிஷன் கேரளா
அதாவது காங்கிரஸ் இடதுசாரிகள் நேரடியாக மக்களிடம் பிரச்சாரம் செய்வது, பிரம்மாண்ட கூட்டம், தெருமுனை பிரச்சாரம் ஆகியவற்றை அதிகம் நம்பி இருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு மிகப் பெரிய பலனாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த பிரச்சார முறை மாறுகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் இந்த அணுகுமுறை அதன் நூற்றாண்டு இலக்கிற்கு ஓர் எடுத்துக்காட்டு. சமூக நம்பிக்கையின் மூலம் தேர்தல் கட்டமைப்பை உருவாக்கி அதை விரிவுபடுத்துவதே நோக்கம்.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்தே வருகிறது. ஆனால், உள்ளே நுழைய முடியாமல் இருக்கிறது. ஏற்கனவே சுரேஷ் கோபி வென்றுவிட்ட நிலையில், சட்டசபையிலும் ராஜீவ் சந்திரசேகர் மூலம் நுழைய முயல்கிறது. அப்படி நுழைந்துவிட்டால் மற்ற மாநிலங்களைப் போல இங்கும் மளமளவென வளர்ந்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது!
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications