ஐப்பசி மாத பூஜைகள்! இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு! எப்போது வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. வரும் அக். 22ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலாக உள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். கேரளாவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்குத் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.

சபரி மலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை நடைபெறும் அதைத்தொடர்ந்து தை மாதம் அங்கே மகரவிளக்கு பூஜை நடைபெறும். மேலும், ஒவ்வொரு மாதமும் தமிழ், மலையாள மாதப் பிறப்பை ஒட்டி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகளும் நடைபெறும்.
பூஜைகள்: அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து நாளை அக். 18 முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
முதல் நாளான இன்று எந்தவொரு சிறப்புப் பூஜைகளும் நடக்காது. நாளை முதல் வழக்கான பூஜைகளுடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களசாபிஷேகம், சகஸ்ர காசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை நடைபெறும்.
தரிசனம்: ஐப்பசி மாத பூஜையின் போது வரும் ஆண்டிற்கான மண்டல, மகர விளக்குப் பூஜைக்காக ஐயப்பன் கோவில், மாளிகைப்புறத்து அம்மன் கோவிலில் பணியாற்றும் மேல் சாந்தி தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து அவர் 22ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோவிலின் நடை அடைக்கப்படும்.
தரிசனத்திற்கான முன்பதிவு இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாள் பூஜைக்காக நவம்பர் 10, 11 தேதிகளில் நடை திறக்கப்படும். அதேபோல மண்டல பூஜைக்காக வரும் நவ. 16 முதல் டிசம்பர் 27 வரை நடைதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications