மன்னருக்கு கொடுக்கப்படும் பணமுடிப்பு! நாளையுடன் மூடப்படும் சபரிமலை நடை! இரவு 10 மணி வரையே தரிசனம்!
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்று நெய்யபிஷேகம் நிறைவடைகிறது. தொடர்ந்து களபாபிஷேகம் நடைபெற்று நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து கோவிலுக்கான சாவியும் வருமானமும் பந்தள மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் கடந்த 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்ற நிலையில் பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை ’சுவாமியே சரணம் ஐயப்பா” என கோஷம் விண்ணைப் பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முன்னதாக, பந்தள அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருவாபரணம் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெற்ற நிலையில் பெரியாணை வட்டம், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அட்டத்தோடு, அட்டத்தோடு மேற்கு காலனி, இலவுங்கல், நெல்லிமலை, அய்யன்மலை, பம்பையில் மலை உச்சி, மலைஉச்சியின் நடுப்பகுதி, பெரியானை வட்டம், சன்னிதானம் பாண்டிதாவளம், தரிசன காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டப முன்பகுதி, திருமுற்றத்தின் தெற்கு பகுதி, ஆழி பகுதி, கொப்பரைகலம், ஜோதி நகர், வனத்துறை அலவலகம் முன்பு, குடிநீர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மகர ஜோதி தரிசனம் தெரிந்த நிலையில், பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் மகரஜோதி தரிசனம் நிறைவடைந்திருக்கும் நிலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று 10.30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து களபாபிஷேகம் நடைபெறும் நிலையில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே சபரிமலை சன்னிதானத்தில் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து நாளை மாலை 6:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். 20ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஐயப்பனை வளர்த்த பந்தளம் மன்னர் சார்பாக பிரதிநிதியான ராஜ ராஜ வர்மன் ஐயப்பனை தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதி முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி நடையை அடைக்கிறார்.
பிறகு 18 படி வழியாக கீழே வந்து கோயிலுக்கான சாவியையும் இந்த ஆண்டு வருமானத்தை பந்தள மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்கும் வகையில் பண முடிப்பையும் வழங்குவார். அதையெல்லாம் கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும் மன்னர் பிரதிநிதி வரும் காலங்களில் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என கூறி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட திருவாபரண பெட்டியை பெற்றுக் கொண்டு செல்கிறார். அத்துடன் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் நிறைவடைகிறது. தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரியில் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications