திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போர்க்களமானது நிலக்கல்.. போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தடியடி

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் மோசமாக தடியடி நடத்தி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிலக்கல்லில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் மோசமாக தடியடி நடத்தி இருக்கிறார்கள்.

    இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட உள்ளது. இன்று மாலை பெண்கள் கோவிலுக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Sabarimala Protest: Police using lathi charge against people who are protesting

    இதற்கு எதிராக மக்கள் பலர் போராடி வருகிறார்கள். சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது. அந்த பகுதியில்தான் போராட்டக்காரர்கள் கூடி நிற்கிறார்கள்.

    இந்த நிலையில்தான் சபரிமலைக்கு பெண்கள் வருவதை எதிர்ப்போர் மீது போலீசார் தடியடி நடத்தி வருகிறார்கள். தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீஸ் கலைத்து வருகிறது.

    இன்னும் சில மணி நேரத்தில் நடை திறக்கப்பட இருப்பதால் தடியடி நடத்தப்பட்டு கூட்டம் கலைக்கப்படுகிறது. போலீஸ் தடியடியால் நிலக்கல் போர்க்களமாகியுள்ளது. அங்கு நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

    நிலக்கல்லில் இருந்துதான் மக்கள் மலைக்கு செல்ல வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் அங்கேயே பெண்களை மறித்து போராடி வருகிறார்கள்.

    காலையில் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. அங்கு வந்த பெண்களின் கார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். பெண் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.

    காலையில் இதனால் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது போலீஸ் தடியடி நடத்தி வருகிறது.

    English summary
    Sabarimala Protest: Police using lathi charge against people who are protesting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X