கல்வீச்சு, தள்ளுமுள்ளு.. சபரிமலை முழு அடைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை.. பதற்றம்!
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிராக கேரளாவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இதனால் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீஸ் பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் கலவரம்
காலையில் இருந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் கேரளாவில் நடக்கும் முழு அடைப்பில் திடீர் என்று கலவரம் ஏற்பட்டுள்ளது. கொல்லம் பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கேரளாவின் வேறு சில பகுதிகளிலும் கலவரம் நடப்பதாக தகவல்கள் வருகிறது.

போலீஸ் எதிர்ப்பு
கொல்லத்தில் இந்து அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்ட செய்ய முயன்றதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் போராட்டக்கார்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தற்போது வன்முறையில் முடிந்துள்ளது.

கல் வீசி தாக்குதல்
இந்த கலவரத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 போலீசார் உட்பட 4 பெண் போலீசார் காயம் அடைந்தனர். தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக 5000 போலீசார்
கலவரம் காரணமாக கொல்லத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கூடுதலாக 5000 போலீசார் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் அம்மாநில முதல்வர் பினராயின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.












Click it and Unblock the Notifications