திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரும் சீராய்வு மனுக்கள்.. விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்

சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனு மீது நவம்பர் 13ல் இருந்து விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை உத்தரவை மறுசீராய்வு கோரும் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனு மீது நவம்பர் 13ல் இருந்து விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    கடந்த மாதம் கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியானது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    Sabarimala Row: Supreme Court will decide on the review plea today

    இந்த நிலையில் சென்ற வாரம் கோவில் நடை திறக்கப்பட்டது. 5 நாட்கள் நடை திறக்கப்பட்டது. ஆனால் ஒரு பெண் கூட கோவிலுக்குள் கடைசி வரை அனுமதிக்கப்படவில்லை. 10 முதல் 50 வயது பெண்கள் யாருமே அனுமதிக்கப்படவில்லை.

    கடந்த ஐந்து நாட்களுமே கோவிலை சுற்றி தொடர் போராட்டம் நடந்தது. சில சமயம் பெரிய கலவரம் கூட நடந்தது. இந்த நிலையில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்தது.

    சபரிமலையில் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை தொடர்ந்து பலர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சபரிமலை குறித்து அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனு மீது நவம்பர் 13ல் இருந்து விசாரணை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    English summary
    Sabarimala Row: Supreme Court will decide on the review plea today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X